கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் சிந்தாமணி பட்டி கிராமத்தில் உள்ள சஊதிய்யா ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 13 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த பிரபு சங்கர் வழங்கினார்.







 


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், "நீங்கள் இந்த மாதம் தோறும் இருக்கின்ற. நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் எங்களையும் அழைத்து இறைவனுடைய ஆலயம் என்பது அனைவருக்கும் உன்னதம் என்பதை உணர்த்தி எங்களுக்கும் இங்கு இடம் அளித்து உங்களுடன் இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்வாய்ப்பு வழங்கிய உங்களுக்கும், பள்ளிவாசல் உடைய அனைவருக்கும் உங்களுடைய ஹாஜி அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்த இறைவனுடைய வீடு என்பது இறைவனுடைய புகழ் மட்டுமே பாடல் மட்டுமே பயன்படுத்தக்கூடிய இடம் ஆகும்.. மனிதனுடைய முயற்சி என்பது இறை அருமை இன்றி நடைபெறாது.  . நம்முடைய நம்பிக்கைகள் வெவ்வேறு விதமாக இருந்தாலும் இறை நம்பிக்கை என்பது ஒருவருக்கு ஒருவர்  அன்பு பரிமாற்றத்தை கொடுக்கும் இடமாகும். ஒரு சக மனிதனுக்கு நோக்கி நமக்கு அன்பை அதிகரிப்பது நாம் இறைவனை நம்பி அறிந்திருக்கிறோம் என்பது உணர்ந்திருக்கிறோம். கடவுள் வழியில் தான் நீங்கள் சொல்லக்கூடிய விஷயங்கள் அனைத்தும் இறைவனுடைய மிகச்சிறந்த வெவ்வேறு பரிமாணத்தை வெளிப்பாடுகளால் நாங்களும் எங்களால் முடிந்த சக மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு உதவ முடியும். இந்த உன்னத தத்துவத்தை உணர்த்தக்கூடியது தான் சக மனிதனுடைய அன்பு செலுத்தக்கூடிய இந்த நிலையாகும். இந்த முப்பது நாள் நோன்பு எடுத்தது உங்களின் தத்துவத்தை வெளிப்பாட்டினை உணர்த்துகிறது. என்பதில் மிகையாகது. அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.




 


இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஹாஜி சிராஜுதீன் அஹமத் ரஷாதி, கரூர் கோட்டாட்சியர் ரூபினா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சந்தியா, கடவூர் வட்டாட்சியர். ராஜசேகர், கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.ராணி மற்றும்  ஜமாத் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆண்ட ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, வளாகத்தின் சுற்றுப்புறத் தூய்மை, அலுவலக தூய்மை, ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்களின் கோப்புகள் மற்றும் பதிவேடுகள், கணினி அறை ,பதிவறையில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளில் உள்ள முக்கிய கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு முறையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், குடிநீர், கழிப்பறை மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கோட்டாட்சியர் புஷ்பா தேவி, தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் முரளிதரன், குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.


நாளை முதல் மின்தடை மேம்பாட்டு பணிகள் காரணமாக வேப்பம்பாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் ஏப்ரல் 21ஆம் தேதி 9 மணி 3 மணி வரை வேப்பம்பாளையம், கோவிந்தபாளையம், ஆண்டான் கோவில், ரெட்டிப்பாளையம், வடிவேல் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.