அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, 7,000 கனஅடியாக, உயர்த்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 7,550 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 7,323 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே, செட்டிபாளையம் தடுப்பணை நிரம்பியது. அதேபோல் பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 87.37 அடியாக இருந்தது.






திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.79 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.




கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 15.74 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.




கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு ஒரு லட்சத்து, 47 ஆயிரத்து, 57 கன அடி தண்ணீர் வந்தது. காலை 10:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 221 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதியில் குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து, 65 ஆயிரத்து, 101 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.




காவிரியில் 1.6 லட்சம் கன அடி -  அமராவதியில் 7.4 ஆயிரம் கன அடி


மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. இதே போல் அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட 7 ஆயிரத்து, 473 கன அடி தண்ணீர் அமராவதியில் சென்று கொண்டிருக்கிறது. இதில் ஆற்றில் 7 ஆயிரத்து, 323 கன அடி நீரும், வாய்க்காலில் 150 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.




மாயனூர் தடுப்பணைக்கு ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 221 கன அடி தண்ணீர் வருகிறது. தடுப்பணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 101 கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. வாய்க்கால்களில் ஆயிரத்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணையில் தண்ணீர் நிரம்பி வருவதால், அமராவதி ஆற்றினை சுற்றி உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண