அமராவதியில் நீர்வரத்து சரிவு
மழை குறைந்ததால் அமராவதி ஆற்றில் பெரியஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,173 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 88,13 அடியாக இருந்தது. பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு 8,852 கான அடி தண்ணீர் வந்தது. ஆற்றுப்பகுதிகளில் மழை குறைந்ததால் காலை 6 நிலவரப்படி வினாடிக்கு 7,673 கன அடியாக நீர் வரத்து குறைந்தது.
காவிரி ஆற்றின் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 41 ஆயிரம் 37 கனஅடி வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரத்து 529 கன அடியாக தண்ணீர் குறைந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நங்கஞ்சி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 38.38 அடியாக இருந்தது. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. அணையின் நீர்மட்டம் 26.14 அடியாக இருந்தது. கடலூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணையின்28.06 அடியாக இருந்தது.
கூடுதல் நீர்வரத்தால் நிரம்பும் தருவாயில் கார்வழி அணை.
விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்தி கார்வழி அணைக்கு கூடுதல் வரத்து வருகிறது. நீர்வரத்து பொறுத்து ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் சுற்றுலா பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து நொய்யல் ஆறு துவங்குகிறது. சின்ன முத்தூர் என்ற இடத்தில் நொய்யல் ஆற்றில் தடுப்பணை உள்ளது.
இப்பகுதியில் இருந்து அஞ்சூர் ஊராட்சி கௌதபாளையம் என்ற இடத்தில் கரூர் மாவட்டம் எல்லையை நொய்யல் ஆறு தொடுகிறது. கரூர் ஒன்றியத்தில் சென்று காவையில் கலக்கிறது. இந்த நொய்யல் ஆற்று பாசனத்தை நம்பி சூரியகாந்தி, பருத்தி, நெல், சோளம், கம்பு போன்ற பணப்பயிர்கள் விவசாயிகளின் பயிரிட்டு வந்தனர்.
இந்த சூழ்நிலையில் பரமத்தி ஒன்றியம் கார்வழி ஊராட்சியில் ஆத்துப்பாளையம் அணையில் நொய்யல் நீர் தேக்கம்1980 ம் ஆண்டின் உயரம் 26.9 அடியும் நீளம் 9,350 அடியும் ஆகும். இங்கு 235 மில்லியன் கனஅடி நீரை தேக்க தேவையான கட்டுமான பணிகள் தொடங்கி 1990 ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது.
இந்த அணை மூலம் நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் வரும் உபரி நீரை கீழ்பவானி வாய்க்காலில் வரும் கசிவு நீரையும் கார் வழியில் நொய்யல் நீர் தேக்க அணையில் தேக்கி வைத்து வாய்க்கால்கள் மூலம் அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, தென்னிலை கிழக்கு, அத்திப்பாளையம், குப்பம், புன்னம், ஆகிய ஊராட்சிகள் மற்றும் கரூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுமார் 19000 ஏக்கருக்கு மேல் விளைநிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம், சின்ன முத்தூரில் உள்ள மதகணை திறக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் உபரி நீர் அத்திப்பாளையம் அணைக்கு நீர்வரத்து கூடுதலாக வந்து கொண்டு உள்ளதால், நீர்வரத்து பொருத்து எந்த நேரத்திலும் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.