குளித்தலை அருகே சுருமான் பட்டி வானகத்தில் இயற்கை ஆர்வலர் நம்மாழ்வரின் 85 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மரபு சார் விதைகள் கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சுருமான் பட்டி வானகத்தில் இயற்கை ஆர்வலர் நம்மாழ்வரின் 85 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மரபு சார் விதைகள் கண்காட்சி மற்றும் கருத்தரங்க கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த இயற்கை ஆர்வலர்களுக்கு நம்மாழ்வார் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மறைந்த நம்மாழ்வார் பற்றியும், அவருடனான நினைவுகள் பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் சிறப்புரை ஆற்றினர்.
வானகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மரபுசார் நெல் மற்றும் காய்கறி விதைகள், நாட்டு காய்கறிகள் கண்காட்சியும் நடைபெற்றன. மேலும் வந்திருந்த அனைவருக்கும் சிறுதானிய உணவு வகைகள் விருந்தாக அளிக்கப்பட்டன.
கரூர் ஜி சி மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச எலும்பு மற்றும் முழங்கால் மூட்டு வலி சிறப்பு மருத்துவ முகாம்.
கரூர் ராமகிருஷ்ணாபுரம் அருகே உள்ள டாக்டர் ஜி சி ஹாஸ்பிடல் வளாகத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச எலும்பு முழங்கால் மூட்டு வலி முகாம் நடைபெற்றது இந்த இலவச எலும்பு முழங்கால் மூட்டு வலி சிறப்பு முகாமை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இதில் 50-க்கும் மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை மருத்துவர் ரஜினிகாந்த் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கரூர் ஸ்ரீ பிரபஞ்சம் ஜூனியர் பள்ளியில் 12 ஆம் ஆண்டு விழா.
கரூர் சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் உள்ள ஸ்ரீ பிரபஞ்சம் ஜூனியர் பள்ளியின் 12 வது ஆண்டு விழா 07.04.2023 மாலை கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் சௌந்தர நாயகி ஆண்டறிக்கை வாசித்தார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முன்னிலை பொறுப்பை பள்ளியின் தாளாளர் சிவக்குமார் வகித்தார்.
தொடர்ந்து இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சுதா சூர்யா ஹாஸ்பிடல் கரூர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தனம் எஜுகேஷன் சார்பாக தனம் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் தற்காப்பு கலை கருத்த மற்றும் யோகா உள்ளிட்ட சாதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது குழந்தைகளின் நடன நிகழ்ச்சியை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.