அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபம் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
"திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபம் திருவிழாவெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது"

Tiruvannamalai Karthika deepam festival: அக்னி ஸ்தலமாக இருக்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீப உற்சவம் மிக முக்கிய உற்சவமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார்த்திகை தீபத் திருவிழா அன்று திருவண்ணாமலை படையெடுப்பது வழக்கமாக உள்ளது.
தீபத் திருவிழா கொடியேற்றம் - Deepam Festival
திருவண்ணாமலை கார்த்திகை தீப உற்சவம், 10 நாட்கள் நடைபெறும் மிக முக்கிய உற்சவமாகவும் இருந்து வருகிறது. உற்சவத்தின் கடைசி நாள் மலை மீது, தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமர்சியாக தொடங்கியது.
தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கார்த்திகை தீப கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் முதல் நாளான இன்று காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற உள்ளது.
முக்கிய உற்சவங்கள் என்ன ?
25-11-2025 - இரண்டாம் நாள் உற்சவம்- காலை உற்சவம் - விநாயகர், சந்திரசேகர் - தங்க சூரிய பிரபை உற்சவம்.
இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - வெள்ளி இந்திர விமானம்
26-11-2025 - மூன்றாம் நாள் திருவிழா - காலை உற்சவம் - விநாயகர், சந்திரசேகர் - பூத வாகனம். இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் சிம்மவாகனம் - வெள்ளி அன்ன வாகனம் உற்சவம் நடைபெறுகிறது.
27-11-2025 - நான்காம் நாள் திருவிழா- காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - நாகவகம். இரவு உற்சவம் - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி காமதேனு, கற்பக விருச்சிக வாகனம் மற்றும் இதர வெள்ளி வாகனங்கள் உற்சவம் விமர்சையாக நடைபெற உள்ளது.
28-11-2025 - ஐந்தாம் நாள் திருவிழா - காலை உற்சவம்- விநாயகர் , சந்திரசேகர்- கண்ணாடி ரிஷப வாகனம். இரவு உற்சவம் - பஞ்சமூர்த்திகள் வெள்ளிப் பெரிய ரிஷப வாகனம் உற்சவம் விமர்சையாக நடைபெற உள்ளது.
29-11-2025 -vஆறாம் நாள் திருவிழா- காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - வெள்ளி யானை வாகனம் - 63 நாயன்மார்கள் வீதியுலா. இரவு உற்சவம் - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள்.
30-11-2025 - ஏழாம் நாள் திருவிழா- காலை உற்சவம் - காலை 6 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் விருச்சக லக்னத்தில் விநாயகர் தேர் வடம் பிடித்தல். பஞ்ச மூர்த்திகள் - மகாராதங்கள் - தேரோட்டம். மாலையில் பஞ்ச மூர்த்திகள் - ஆஸ்தான மண்டபம் வந்து சேருதல் உற்சவம்.
1-12-2025 - எட்டாம் நாள் திருவிழா - காலை உற்சவம் - விநாயகர், சந்திரசேகர் - குதிரை வாகனம். மாலை உற்சவம் - 4:30 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் : இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - குதிரை வாகனம்
2-12-2025 - ஒன்பதாம் நாள் திருவிழா- காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - புருஷா முனி வாகனம் இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - கைலாச வாகனம் காமதேனு வாகனம்.
03-12-2025 - பத்தாம் நாள் திருவிழா - அதிகாலை 4 மணிக்கு பரணி தீப தரிசனம். மாலை 6:00 மணிக்கு மகா தீப தரிசனம்.
04-12-2025 - தெப்பல் திருவிழா - இரவு 9 மணிக்கு சந்திரசேகர் தெப்பல் உற்சவம்
05-12-2025- தெப்பல் திருவிழா - 20 ஒன்பது மணிக்கு பராசக்தி அம்மன் டெம்பிள் உற்சவம்
06-12-2025 - தெப்பல் திருவிழா - இரவு ஒன்பது மணிக்கு சுப்பிரமணியர் தெப்பர் உற்சவம்.





















