தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் கர்நாடகா, புதுச்சேரி அரசு அதிகாரிஅக்ளும் காணொலி வாயிலாக பங்கேற்றனர். கர்நாடகாவில் இருந்து விநாடிக்கு 12,500 கன அடி வீதம் 15 நாட்கள் நீர் திறக்க தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவுபடி 5,000 கன அடி நீரை வழங்கவில்லை என கர்நாடக மீது தமிழ்நாடு புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்திவிட காவிரி மேலாண்மை ஆணயம் கர்நாடக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், கர்நாடக அரசு திடீரென தண்ணீர் வழங்குவதை நிறுத்தி விட்டது.
இந்நிலையில் 2-வது கட்டமாக 15 நாள்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிநாட்டுக்கு திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போதுமான தண்ணீர் இல்லை எனக் கூறி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் அரசு தெரிவித்தது. காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட அவசர மனு வரு ம் செப்டம்பர் 21-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
காவிரி நீர் விவகாரம்:
டெல்டா விவசாயிகளின் அடிப்படையாக உள்ள காவிரி நீர் தற்போது, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னையாகவும் மாறியுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான், தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது.
மேலும் வாசிக்க..
'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ விநாயகர் சிலைக்கு தடை - மேல்முறை மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்