காஞ்சிபுரம்: நாளை மின் தடை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? முக்கிய காரணம் இதோ!
Kanchipuram Power Shutdown Tommorow: "காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது"

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவு 230கி/வோ. ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதியில் நாளை மின்தடை ?
சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவில் 230கி/வோ. ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி வரும் 11.02.2026 புதன்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் கீழம்பி, பள்ளம்பி, ஆட்டோநகர், ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு துலக்கம் தண்டலம் ஆகிய பகுதிகளில் 11.02.2026 புதன்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏன் மேற்கொள்ளப்படுகிறது ?
தமிழகத்தில் பொதுவாக மாதம்தோறும் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்படுவது வழக்கமாக இருக்கிறது. மின்சார விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றி சீராக வழங்குவதற்காகவும், எதிர்பாராத விபத்துகளைத் தவிர்க்கவும் மின்சார வாரியம் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. குறிப்பாக, மின் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளில் (Transformers) ஏற்படும் தேய்மானங்களைச் சரிசெய்தல், பழுதடைந்த இன்சுலேட்டர்களை மாற்றுதல் மற்றும் மின் கம்பிகளின் மீது உராய்ந்து விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய மரக்கிளைகளை அகற்றுதல் போன்றவை இந்தப் பராமரிப்புப் பணியில் மிக முக்கியமானவை.
மேலும், துணை மின் நிலையங்களில் உள்ள உயர் அழுத்தக் கருவிகளின் செயல்பாட்டைப் பரிசோதிக்கவும், அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுகட்ட பழைய மின் உபகரணங்களைத் தரம் உயர்த்தவும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இத்தகைய திட்டமிடப்பட்ட மின்தடைகள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெரும் மின் கோளாறுகளைத் தவிர்த்து, பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்கின்றன. இதனால்தான் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்படுகிறது.























