காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் - Kanchipuram Ekambaranathar Temple Kumbabhishekam 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் நாளான 08.12.2025 அன்று அதிகாலை 02.00 மணிமுதல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் கீழ்காணும் வழித்தடங்கள் வழியாக வந்துசெல்லும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதான் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நகரத்திற்கு வரும் பேருந்துக்கள் வெள்ளைகேட், ஒலிமுகமதுபேட்டை, புத்தேரி தெரு ஜங்சன், குஜராத்திசத்திரம் மற்றும் கச்சபேஸ்வரர் கோயில் வழியாக காஞ்சிபுரம் பேருந்துநிலையம் வந்தடையும் .

Continues below advertisement

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் வேலூர் செல்லும் பேருந்துகள் டவுன் பேங்க், பூக்கடைச்சத்திரம், கம்மாளத் தெரு மற்றும் பொன்னேரிகரை வழியாக செல்லும்.

எந்த இடங்களில் வாகனம் நிறுத்த வேண்டும்

குடமுழுக்கு விழா நடைபெறும் நாளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கீழ்காணும் வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறது.

• யாத்திரி நிவாஸ் (ஒலிமுகமதுப்பேட்டை)

• உலகலந்த பெருமாள் கோயில் அருகில்

• SSKV பள்ளி வளாகம்

• மெக்லின் மைதானம்

• புதிய இரயில் நிலையம் அருகில்

• சோழன் பள்ளி வளாகம்

குடமுழுக்கு விழா நடைபெறும் நாளில் குஜராத்திசத்திரம் முதல் கம்மாளத் தெரு சந்திப்பு வரையிலும் சங்கரமடம் முதல் கச்சபேஷ்வரர் கோயில் வரையிலும் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு, தேரடி தெரு, பெருமாள் தெரு, கிழக்கு மாடவீதி ஆகிய சாலைகளிலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை. மேற்படி வாகனங்களை ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் (Parking) மட்டுமே நிறுத்த வேண்டும். மேலும் போக்குரவத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கோவிலுக்கு அனுமதி

குடமுழுக்கு விழாவிற்கு வரும் பக்தர்கள் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு வழியாக மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

குடமுழுக்கு விழா நடைபெறும் நாளன்று (08.12.2025) பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் முன் ஏற்பாடாக திட்டமிட்டு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. குடமுழுக்கு விழா நல்ல முறையில் நடைபெறுவதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.