மேலும் அறிய

காஞ்சிபுரம் டவர் விவகாரம்: என் ஆபீஸ்லேயே டவர் இருக்கு - கலெக்டர் சொன்ன அதிரடி பதில்!

"காஞ்சிபுரம் மாவட்டத்தில் டவர் விவகாரம் தொடர்பாக புகார் கொடுக்க வந்த பொதுமக்களிடம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்."

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட செல்லப்பெருமாள் நகரில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் மக்கள் நெருக்கமான குடியிருப்புகளுக்கு இடையே, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் சார்பில் 5ஜி செல்போன் டவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், குடியிருப்புகளுக்கு மிக அருகில் டவர் அமைப்பதால், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியரிடம் குவிந்த புகார்கள்

இந்த விவகாரம் தொடர்பாக, அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று, மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து கோரிக்கை மனு அளித்தனர். செல்போன் டவர் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்துத் தங்கள் கவலைகளை அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

ஆட்சியரின் விளக்கம் ஏற்படுத்திய அதிர்ச்சி

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சினேகா, செல்போன் டவர்களால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இதுவரை அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். சென்னை போன்ற பெருநகரங்களிலேயே மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவே ஏராளமான டவர்கள் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், "எனது அலுவலகத்தின் மாடியிலேயே செல்போன் டவர் உள்ளது; இருப்பினும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இத்தகைய டவர்கள் அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் தொலைத்தொடர்பு சிக்னல் தொடர்பான பிரச்சினைகள் தீர வாய்ப்புள்ளது" என்று விளக்கம் அளித்தார்.

அடுத்தகட்ட போராட்டத்திற்கு அழைப்பு

ஆட்சியரின் இந்த விளக்கத்தால், மனு அளிக்கச் சென்ற படித்த பெண்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்று எதிர்பார்த்த இடத்தில், அதற்கு மாறான கருத்து தெரிவிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் டவர் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மக்கள், இந்தத் திட்டம் கைவிடப்படாவிட்டால், அடுத்தகட்டமாகப் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
Aadhav Arjuna: எல்லாத்துக்கும் லஞ்சம் கேக்குறாங்க.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதங்கத்தை கொட்டிய கல்வராயன் மக்கள்
Aadhav Arjuna: எல்லாத்துக்கும் லஞ்சம் கேக்குறாங்க.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதங்கத்தை கொட்டிய கல்வராயன் மக்கள்
எச்சரிக்கை அல்ல, பொறுப்புணர்வு.. பள்ளிகளில் அமைச்சர் ராஜ்மோகன் திடீர் ஆய்வு ?
எச்சரிக்கை அல்ல, பொறுப்புணர்வு.. பள்ளிகளில் அமைச்சர் ராஜ்மோகன் திடீர் ஆய்வு ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
“ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
Maruti Jimny New Variants: இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
இப்பவாவது விக்குமா.? ஜிம்னியின் இரண்டு புதிய மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த மாருதி
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
Embed widget