வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் தமிழக கடற்பகுதியை நெருங்கியுள்ள நிலையில் உஷார் நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்து இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இன்று கனமழை எச்சரிக்கை - TN Rain Prediction
தமிழ்நாட்டில் இன்று கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அடப்பு விடப்பட்டுள்ளது.
இதுபோக வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வானிலை நிலவரம் Kanchipuram Weather Forecast
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை இன்று (29-11-2025) ஆரஞ்சு அலட் விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், வாலாஜாபாத் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று நாளையும் (30-11-2025) காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களுக்கு ஆரஞ்சு அலட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்ட வானிலை நிலவரம் - Chengalpattu Weather Forecast IMD
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இன்று (29-11-2025) ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நாளையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை (30-11-2025) ஆரஞ்சு அலட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நிலவரம் - Thiruvallur Weather Forecast
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று (29-11-2025) மாவட்டம் முழுவதும் ஆரஞ்சு அலட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நாளை (30-11-2025) திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட நிலவரம் - Ranipet Weather Forecast
ராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரை இன்று ஆரஞ்சு அலட் மற்றும் நாளை ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரை நாளை மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.