Kamal Haasan Press Meet LIVE: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு முழு ஆதரவு - கமல்ஹாசன் அறிவிப்பு

Kamal Haasan Press Meet LIVE Updates: சென்னை ஆழ்வார்பேட்டையில் மநீம தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில், இதுகுறித்த உடனடி அப்டேட்களை தெரிந்து கொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்

முகேஷ் Last Updated: 25 Jan 2023 12:56 PM
நாடாளுமன்ற தேர்தல் குறித்து இப்போது விவாதிக்க தேவையில்லை - கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தல் குறித்து இப்போது விவாதிக்க தேவையில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் - கமல்ஹாசன் 

ஈரோடு கிழக்கில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் - கமல்ஹாசன் 

இளங்கோவன் வெற்றிக்காக உறுதுணையாக இருப்போம் - கமல்ஹாசன்  

இளங்கோவன் வெற்றிக்காக நானும் எனது கட்சியினரும் உறுதுணையாக இருப்போம் - கமல்ஹாசன்  

பெரியாரின் பேரனை ஆதரிக்கிறேன்... அறிவித்த கமல்ஹாசன்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் எனது நண்பரும், பெரியாரின் பேரனுமான இளங்கோவனை ஆதரிக்கிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் - கமல்ஹாசன் அறிவிப்பு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு முழு ஆதரவு - கமல்ஹாசன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு - கமல்ஹாசன் அறிவிப்பு 

Kamal Haasan Press Meet LIVE: ஆதரவு அளிக்கும் முடிவில் கமல்..? அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம்..!

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிக்கும் முடிவையே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எடுப்பார் என்று கூறப்படுகிறது. 

Kamal Haasan Press Meet LIVE: ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே முடிவா..? கமல் ஹாசனின் வியூகம் என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று முன்தினம் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினர். இந்த நிலையில், இன்றைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கமல்ஹாசன் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸுக்கு ஆதரவா..? கமல்ஹாசன் இன்று ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். 

Background

Kamal Haasan Press Meet LIVE Updates: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ஆம்  தேதி  திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 11-ஆம் தேதி அறிவித்தது.


இதனையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல், எதிர்வரும் பிப்ரவரி மாதம்  27ஆம் தேதி நடைபெறும்  என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மூன்று மாநில  சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அத்துடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது.


மேலும் வருகின்ற மார்ச் மாதம் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியினரும் பரபரப்பாக பணிகளை துவக்கியுள்ளனர். இதற்காக ஒவ்வொரு கட்சியினர் ஆதரவு கோரி வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசனிடம் பலரும் ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில்  மதுரையில்  கமலஹாசன் ரசிகர்கள் அடித்த  போஸ்டர் வைரலாக வருகிறது. அதில்..," ஈவோரை விலக்கு, இன்றைய இலக்கு, ஈரோடு கிழக்கு என   சுயேட்சியாக தேர்தலில் களம் காண்போம் என்பது போல வலியுறுத்தும் விதமாக போஸ்டர் அடித்துள்ளனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.