கள்ளச்சாராயம் என்பது ஏதோ கிராமப்புறங்களிலோ, மலை கிராமங்களிலோ விற்பனை செய்யப்படும் என்பதுதான் பொது பார்வையாக இருந்து வருகிறது. ஆனால் கள்ளக்குறிச்சியில் மாவட்ட தலைநகரிலேயே, கள்ளச்சாராயம் படுஜோராக விற்பனை நடந்ததை தொடர்ந்து 110 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் குடித்ததில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 70-க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெத்தனால் கலந்த விஷ சாராயம்
இதுவரை கள்ளச்சாராயம் விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கும் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயத்தால் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதோடு, கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குறைந்த விலை கள்ளச்சாராயம்
அதாவது கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்திருப்பவர்கள் பெரும்பாலானோர் ஏழை எளிய குடும்பத்தை பின்புலமாகக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதிகளவு உடல் உழைப்பை செலுத்தும், கூலித் தொழிலாளர்களாகவும் தூய்மை பணி தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றனர். இதனால் இவர்களால் அரசு மதுபான கடைகளில், 150 200 ரூபாய் கொடுத்து மது வாங்குவது என்பது கடினமான ஒன்று. இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு புரிந்த விலையில் விஷச்சாராயத்தை இப்பகுதியில் விற்பனை மேற்கொண்டு வந்துள்ளனர். அதாவது இப்பகுதியில் கலாச்சாராயம் சிறிய பாக்கெட் 30 ரூபாய்க்கு, பெரிய பாக்கெட் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்து வந்துள்ளனர்.
அதிகாலையிலேயே துவங்கும் விற்பனை
கள்ளக்குறிச்சி நகர் பகுதிகளில் அதிகாலையிலேயே கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டி பறந்து வந்துள்ளது. காலை 5 மணிக்கு எல்லாம் டோர் டெலிவரி செய்யும் அளவிற்கு, சாராய வியாபாரிகள் செல்வாக்காக வலம் வந்துள்ளனர். இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டே கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வந்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயத்தை விற்பதற்கு என்ன ஒரு சில குடிசை வீடுகள், ஆகியவற்றை விற்பனை மையங்களாகவே பயன்படுத்தி வந்துள்ளனர். இத்தனைக்கும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம், தங்கு தடை இன்றி விற்பனை நடைபெற்று வந்துள்ளது. பேருந்து நிலையம் அருகேவும் கள்ளச்சாராயத்தை எந்தவித, அச்சமும் இன்றி விற்பனை செய்து வந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தேவையானவற்றை கள்ளச்சாராய வியாபாரிகள் கவனிப்பதால், கண்டும் காணாமலும் போலீஸ் இருந்து வந்துள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு நடுவில்
சுற்றி குடியிருப்பு பகுதிகள் அதிகம் இருக்கும் இடங்களில் கூட, எந்தவித அச்சமும் இல்லாமல் கள்ளச்சாராயம் வியாபாரம் நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்கும் பொது மக்களையும் மிரட்டும் வகையில் கலாச்சார வியாபாரிகள், அச்சுறுத்தி வந்துள்ளனர். இதயம் மீறி ஒரு சிலர் ரகசிய புகார் அளித்தாலும் காவல்துறையினர் கண்டும் காணாமலும் இருந்து வந்துள்ளனர். விற்பனை நடைபெற்ற இடத்தில் இருந்து, அருகே நீதிமன்றம், காவல் நிலையம், தாசில்தார் அலுவலகம் ஆகியவை இருந்து வந்துள்ளது.