கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பாக அவருடைய தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யும் போது தங்களுடைய மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 


ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மாணவியின் தந்தை தாக்கல் செய்திருந்த மனு தள்ளுப்படி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நடைபெற உள்ள உடல் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் உயிர்நீதிமன்ற உத்தரவின் படி இன்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை திட்டமிட்டபடி அரசு மருத்துவமனையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.அப்போது மாணவி ஸ்ரீமதி  உடலை மறு கூராய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிவழக்கறிஞருடன் மாணவியின் தந்தை மறு உடல் கூராய்வின் போது உடனிருக்கலாம் என்றும், இதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதேசமயம் மறுகூராய்வு முடிந்த பிறகு மாணவியின் உடலை எந்தவித எதிர்ப்புமின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இறுதிச் சடங்குகள் அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் உத்தரவிட்டார். 









அதில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மாணவியின் பெற்றோர் மறுகூராய்வு செய்யும் மருத்துவர் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரையும் சேர்க்க வேண்டுமென கூறி மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, மோகன் அமர்வு, கிரிமினல் விவகாரங்களில்  தலையிட தங்களுக்கு அனுமதியில்லை என்றும், தனி நீதிபதியின் உத்தரவில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண