முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

Continues below advertisement

தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும் என்று எம்பி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 57 எம்பிக்களில் 19 எம்பிக்கள் மட்டுமே இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டணி கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்பி சுதா பங்கேற்கவில்லை. 

Continues below advertisement

முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்த தொகுதி மறுசீரமைப்பு எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம எம்பிக்கள் புறக்கணித்தனர். அன்புமணி, சுதீஷ் ஆகியோரும் புறக்கணித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்த கூட்டம் முடிவுற்ற நிலையில், எம்பிக்கள் கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து திருமாவளவன், பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

 

திருமாவளவன்

மறுவரையறை கைவிடக்கோரியும், எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்ந்தக்கூடாது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். 543 எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் நாடாளுமன்றம் கேலிக்கூத்தாகி விடும் என்றும் தெரிவித்தார். மேலும், திமுக, அதிமுக கூட்டத்தை தவிர்த்திருக்கலாம், ஆனால் அதே நிலைபாட்டைதான் அவர்கள் எடுப்பார்கள் என நினைக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

பிரவீன் சக்கரவர்த்தி 

எம்பிக்கள் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் வேண்டாம் என முதல்வர் கூறியதை அனைவரும் ஏற்றுக்கொண்டதாகவும் தொகுதி மறுவரையறை வேண்டாம் என்பதே இன்று கலந்துகொண்ட தமிழக எம்பிக்களின் நிலைப்பாடு என்றும் எம்பி பிரவீன் சக்கரவர்த்தி கூறினார். மேலும், தமிழ்நாட்டின் உரிமை பறிப்போகக்கூடாது என்றும் இதில் அரசியல் செய்பவர்களை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் கூறினார்.

மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டின் 39 எம்பிக்களின் இடம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பாஜக கொடுக்கும் சலுகைகளில் ஏமாறக்கூடாது என்றும் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.