சமூக நீதி, சம உரிமை போன்ற உயரிய கொள்கைகளை முன்னெடுத்தவரின் சிந்தனைகள் எக்காலத்திற்கும் நமக்கு வழிக்காட்டும் என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 


திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில், ஆழித்தேர் வடிவில் 7,000 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக  கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார்.  அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை வியப்புடன் பார்வையிட்டார். 


திருவாரூரில் உள்ள காட்டூர் கிராமத்தில் கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு கோட்டத்தை பார்வையிட்டு நிகிழ்ச்சியில் பேசினார்.


இந்த விழாவில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “கலைஞர் கருணாநிதியின் சாதனைகளை போற்றுவதோடு மட்டுமல்லாமல், சமூக நீதி தழைத்தோங்க அவருடைய பங்களிப்பு, அவரின் வாழ்வு ஆகியவற்றை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், கலைஞர் கருணாநிதியின் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவும் இங்கு கூடியிருக்கிறோம். கருணாநிதியின் சிந்தனைகள், திட்டங்கள் ஆகியவை நாடு முழுவதும் பலருக்கும் ஊக்கமளிப்பதாகவும், முன்னோடியாக அமைந்தன. 


சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய அவருடைய கொள்கைகள், முன்னெடுத்த திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அதோடு, வாழும் கால முழுவதும் சமூக நீதி காவலராக திகழ்ந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியவர். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் பொருளாதார மேம்பாடு, பெண்கள் மேம்பாடு, பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு வீடு வசதி, சுகாதார  உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் அகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்தவர்.” என்று புகழ்ந்து பேசினார். 


பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உடல்நலக் குறைவு காரணமாக கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. 


பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் வாழ்த்துரையை எம்.பி. திருச்சி சிவா வாசித்தார். அதன் விவரம்:


கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கலைஞர் கோட்டம் திறக்கப்படுகிறது. கருணாநிதிக்கு அன்பின் வணக்கங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தீவுர அரசியலில் 80 ஆண்டுகள், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இது நாட்டின் எந்த தேசிய, மாநில கட்சிகளின் உள்ளவர்களுக்கும் கிடைக்காத பேறு. வாழ்நாள் முழுவதும் சமூக நீதி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அரும்பாடுப்பட்டவர். பெண்கள் உரிமைகள், பொருளாதாரத்தில் ஏற்றம் காணவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.




ABP நாடு-ன் செய்திகளை உடனுக்குடன் பெற டெலிகிராமில் இணைய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்!