கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேருக்கு புன்னம் சத்திரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு.


 




 


எழுத்தாளர் - கலைஞர் குழுவின் கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ்த் தேர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கரூருக்கு வருகை தந்தது. மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய பகுதியான புன்னம் சத்திரம் கிராமத்தில் சிறப்பான வரவேற்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டது.


 




பறையாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரையாட்டத்துடன் பொக்லைன் இயந்திரத்தில் பக்கெட் மீது ஏறி நின்று மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


 




அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று அதனை பார்த்து வருகின்றனர். முன்னதாக கலைஞரின் திருவுறுவச் சிலைக்கு  மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இதனை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் மற்றும் தளவாபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இந்த வாகனம் நிறுத்தப்படவுள்ளது.