Joy Crizildaa: NICUவில் இருக்கும் குழந்தை.. மாதம்பட்டி ரங்ஜராஜூக்கு மனசாட்சி இல்லையா? - ஜாய் கிரிசில்டா சொன்னது என்ன?
மிரட்டி திருமணம் செய்து கொள்வதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தையா என்ன? - ஜாய் கிரிசில்டா

தனக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு தயார் என்று ஜாய் கிரிசில்டா அதிரடியாக கூறியுள்ளார். டிஎன்ஏ சோதனையில் குழந்தை தன்னுடையது என நிரூபிக்க வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ் கூறிய நிலையில் கிரிசல்டா தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார்
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா புகார் கூறியது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடும் முழுவதும் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ் மீதான இந்த குற்றச்சாட்டால், சமையல் தொடர்பான சந்தேகம், கேள்விகளுக்கு அவரை பின் தொடர்ந்த பலர் அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தை தன்னுடையதுதான்
இதனிடையே, ஜாய் கிரிசல்டாவுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. இதன்பின்னர், ஜாய் கிரிசல்டாவை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் குழந்தை தன்னுடையதுதான் எனவும் மகளிர் ஆணைய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக நேற்று தகவல் வெளியானது. அப்போது, இவர்கள் இருவருக்குமான பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த நிலையில், தான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும், அந்தக் குழந்தை என்னுடையது என்று டிஎன்ஏ பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டால் அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார். நேற்று வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து இதுதொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டார்.
டிஎன்ஏ பரிசோதனைக்கு தயார்
இந்த நிலையில், டிஎன்ஏ சோதனைக்கு தயார் என்று ஜாய் கிரிசில்டாவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தனக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என நிரூபிக்க டிஎன்ஏ சோதனைக்கு தயார்.மகளிர் ஆணைய விசாரணையின்போது டிஎன்ஏ சோதனைக்கு நான்தான் முதலில் வற்புறுத்தினேன். மிரட்டி திருமணம் செய்து கொள்வதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தையா என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜூக்கும் பிறந்த குழந்தை தற்போது NICUவில் சிகிச்சையில் உள்ளது. குழந்தை இந்த நிலைமையில் உள்ள நிலையில் மாதம்பட்டி ரங்கராஜூக்கு மனசாட்சி இல்லையா?” என்று ஆதங்கத்துடன் கேட்டுள்ளார்.
முன்னதாக, மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ பரிசோதனைக்கு தயார் என்று நீண்ட அறிக்கையை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#madhampattyrangaraj pic.twitter.com/pAPLuCP4mK
— Madhampatty Rangaraj (@MadhampattyRR) November 5, 2025">





















