NRCB Trichy : திருச்சி NRCB-யில் வேலை: ரூ.30,000 ஊதியம் - முழு விவரம் உள்ளே!
திருச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-NRCB), காலியாக உள்ள இளம் வல்லுநர் (Young Professional - I) பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருச்சி : திருச்சியில் அமைந்துள்ள மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-NRCB), காலியாக உள்ள இளம் வல்லுநர் (Young Professional - I) பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR - National Research Centre for Banana), தற்காலிக அடிப்படையில் பணிபுரிய தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர்: இளம் வல்லுநர் - I (Young Professional - I)
காலியிடங்கள்: 01
பணித்தன்மை: இது முற்றிலும் தற்காலிகமான ஒரு பணியிடமாகும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பின்வரும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் (M.Sc.) பெற்றிருக்க வேண்டும்:
- உயிரி வேதியியல் (Biochemistry)
- வேதியியல் (Chemistry)
- நுண்ணுயிரியல் (Microbiology)
ஊதியம் மற்றும் வயது வரம்பு:
மாதாந்திர ஊதியம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 30,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் நேர்முகத் தேர்வின் (Interview) அடிப்படையில் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nrcb.org.in/nrcbadmin/webfs/vacancy/YP-1_Weevil.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் nrcbrecruitment @gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முக்கியத் தேதிகள்: விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.05.2026
மத்திய அரசு நிறுவனத்தில் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு www.nrcb.org.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
Before You Go
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















