Apply for Kanchipuram Health Department MLHP vacancy 2026: காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை, தேசிய நலக் குழுமத்தின் கீழ் இயங்கும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (District Health Society) மூலமாக இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid-Level Health Provider - MLHP) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள் விவரங்கள்

இந்தத் தற்காலிகப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பப் படிவத்தை https://kancheepuram.nic.in என்ற காஞ்சிபுரம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் (Self-Attestation) செய்து இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14.08.2026 அன்று மாலை 05.45 மணிக்குள், "நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501" என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட கடைசி நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement