ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு இந்தாண்டு உறுதியாய் நடக்கும் என தமிழக அரசு கூறியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில்,"ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.






பீட்டாவும் ஜல்லிக்கட்டு வழக்கும்:


தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்திருந்தது. பீட்டா வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் தன்னெழுசியாக பெரும் போராட்டம் நடந்தது. அதன் விளைவாகத் தான் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது.


இந்நிலையில், விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள், அதற்குத் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன. அது தொடர்பான வழக்கில் தமிழக அரசும், `ஜல்லிக்கட்டு என்பது காளைகளை துன்புறுத்தும் விளையாட்டு அல்ல, உச்சநீதிமன்ற அதிகாரிகள் ஒருமுறை அதனை நேரில்வந்து பார்க்கவேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது.


பின்னர் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததையடுத்து, அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா என்று கேள்வியெழுந்தது. இந்த நிலையில் தமிழக அரசு இன்று, 2023-ல் திட்டமிட்டபடி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்றுவருகின்றன எனத் தெரிவித்திருக்கிறது.


இந்தச் சூழலில் தான் கமல்ஹாசன் தீர்ப்பை வரவேற்று மநீம சார்பில் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். விருமாண்டி 2004ல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் ஜல்லிக்கட்டு காளையை போற்றி ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும்.