பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 3000 திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement


தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 9 இடங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலம் வரை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3000 மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஆசிரியர்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி உயர்வுக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். 




மேலும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் ஆன பணி நியமனத்தை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.