மேலும் அறிய

சவாரிக்கு 25 ரூபாய்... சாப்பாட்டுக்கு என்ன வழி? ஆட்டோ - டாக்ஸி ஓட்டுநர்களைக் கைவிட்டதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிக்கை!

அமைச்சர் அளித்த வாக்குறுதியை நம்பி ஓட்டுனர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் திமுக அரசு அவர்களுக்குத் துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது!

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்களை உயர்த்தி வழங்கக்கோரி அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஓராண்டாகியும் நிறைவேற்றாத திமுக அரசிற்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்., 

தமிழ்நாட்டில் ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளின் கட்டணத்தை பணவீக்கத்திற்கு  ஏற்ற வகையில், உயர்த்த வேண்டும் என்ற வாடகை ஊர்தி ஓட்டுனர் சங்கங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப் படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால், கடந்த ஆண்டு அளித்த கட்டண உயர்வு குறித்த வாக்குறுதியை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளுக்கான கட்டணம் கடைசியாக கடந்த 2013&ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25&ஆம் தேதி உயர்த்தப்பட்டன. அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 1.8 கி.மீக்கு 25 ரூபாயும், அதன் பின்னர் ஒரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 13&ஆம் ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இன்று வரை கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதனால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம்  10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி 18&ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை சென்னையில் சந்தித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது இந்த விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய கட்டண விகிதம் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின் சரியாக ஓராண்டு நிறைவடைந்து இன்று முதல் இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டங்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், அரசு விழாக்கள் என பல தருணங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்தித்துள்ளார்.

கடந்த ஓராண்டில் எத்தனையோ அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.  ஆனால், அமைச்சர் அளித்த வாக்குறுதியை நம்பி, தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆட்டோ மற்றும் வாடகை டாக்சி ஓட்டுனர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், வாடகை ஊர்திக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி மட்டும் ஓராண்டாகியும் நிறைவேறவில்லை; ஓட்டுனர்கள் துயரமும் தீரவில்லை.

கடைசியாக கட்டணம் உயர்த்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பெட்ரோல், டீசல் விலை இரு மடங்காக உயர்ந்து விட்டது; காப்பீடு, உரிமம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து விட்டன. வாகனங்களின் உயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலைகள் 2 முதல் 3 மடங்கு  அதிகரித்து விட்டன. இதனால் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டன. ஆனால், அதற்கு இணையாக வாகன வாடகை உயர்த்தப்படாததால், அவற்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் ஏழை ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.

செலவுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது. அப்போதும் கூட வாகன வாடகை, எரிபொருள் செலவு போக அவர்களுக்கு கிடைப்பது சில நூறு ரூபாய் மட்டும் தான். இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மூன்று வேளையும் உணவு உண்ண முடியவில்லை.  வாகனங்களுக்கான காப்பீடு, வரிகள், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடிய வில்லை. அதற்காக கடன் வாங்க வேண்டியிருப்பதால் லட்சக்கணக்கான ஓட்டுனர்கள் கடனாளியாகிவிட்டனர். மேலும் இயல்பை விட அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் ஓட்டுனர்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படுகிறது.

எரிபொருள் விலை உயர்வு, பிற கட்டணங்களின் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்டோக்களின் குறைந்தபட்சக் கட்டணத்தை ரூ.50 ஆகவும், அதன்பின் கிலோ மீட்டருக்கு ரூ.25 வீதமும் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வல்லுனர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2022ஆம் ஆண்டில் ஆணையிட்டது. அதன்படி அரசுப் போக்குவரத்துத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அக்குழு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதனால் ஊர்திகளுக்கான வாடகையும் இதுவரை உயர்த்தப்படவில்லை.

வாடகை ஓட்டுனர்கள் பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அதனால் அந்தக் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், ஓராண்டாகியும் அந்தக் கோரிக்கை தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுக்கிறது என்றால், தொழிலாளர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் துரோகம் செய்வதையே தொழிலாக வைத்திருக்கிறது என்று தான் பொருள். அந்த கொடூர குணத்தைக் கைவிட்டு சாதாரண மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ& டாக்சி வாடகைக் கட்டணத்தை திமுக அரசு உடனடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget