தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டம்
தமிழர்களின்திருநாளாம்பொங்கல்பண்டிகையை தை மாதத்தின் தொடக்கத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது, இந்தபண்டிகையானதுசூரியன், இயற்கை, மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து புதுப் பானையில் பொங்கல் வைத்து மக்கள் மகிழ்வார்கள். எனவேதமிழர்களின்திருநாளையொட்டிதமிழகஅரசுசார்பாகஒவ்வொருஆண்டும்பொங்கல்பரிசுவழங்கப்படும். கடந்த 2023 மற்றும் 2024ஆம்ஆண்டில்பொங்கல்பரிசுதொகுப்பானவேட்டி, சேலை, பச்சரிசி, சக்கரையோடுரொக்கப்பணம்ஆயிரம்ரூபாய்வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசு- ரொக்கப்பணம் இருக்கா இல்லையா.?
கடந்த 2025ஆம்ஆண்டுபொங்கல்பண்டிகையின்போதுநிதிநிலைமைமோசமாகஇருப்பதாகதெரிவித்ததமிழகஅரசு,ரொக்கப்பணம்ஆயிரம்ரூபாய்வழங்கவில்லை. எனவேஇந்தாண்டுதமிழகசட்டமன்றதேர்தல்நடைபெறவுள்ளநிலையில்அரசின்சார்பில்மக்களைகவரும்வகையில்பொங்கல்பரிசாகரொக்கப்பணம்வழங்கப்படும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதற்குஏற்பஅதிமுகபொதுச்செயலாளர்எடப்பாடிபழனிசாமிமற்றும்பாஜகமாநிலதலைவர்நயினார்நாகேந்திரனும்ரூ.5000 வழங்கவேண்டும்எனகோரிக்கைவிடுத்திருந்தனர். இந்தநிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி 8ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
ஆனால்ரொக்க பணம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசின் தரப்பில் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும்பொங்கல்பரிசுதொகுப்போடுரொக்க பணம் வழங்குவது தொடர்பாக இன்றோஅல்லது நாளையோமுதலமைச்சர் ஸ்டாலின்அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தனி அரசாணையும் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறதுஇந்த நிலையில் தான் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வருகிற 8ஆம்தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் தற்போது அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவிப்பை பொறுத்து வருகிற 4 அல்லது 5ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
