திருச்செந்தூரில் ISRO-இன்  சிறிய ரக செயற்கைகோள் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த மாதவன்குறிச்சி கிராமத்தில் ISRO சார்பில் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த  அண்டு தொடக்கம். 677 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ள இந்த ஏவுதளத்தை அமைப்பதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியை மேற்கொள்வதில் தாமதம். நில எடுப்புக்கான வழிகாட்டியின் மதிப்பு வெவ்வேறாக இருப்பதால் நில உரிமை தாரர்களுக்கு ஒரே மாதிரியான இழப்பீட்டு தொகை வழங்குவதில் சிக்கல். ஏற்கனவே நில எடுப்புக்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் மேலும் ஒரு ஆண்டுக்கு கால அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்,


”1.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்காக சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைப்பதற்கு தூத்துக்குடி மாவட்டம். திருச்செந்தூர் வட்டத்திலுள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் அலகு VI தொகுதி 1 முதல் 11 வரையில் உள்ள 110.96.34 ஹெக்டேர் புன்செய் நிலங்களை கையகப்படுத்துவதற்கு, நிலம் கையகபடுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம், 2013 (மத்திய நில எடுப்புச் சட்டம், 2013)இன் பிரிவு 91ன் படி. விளம்புகை அறிவிக்கையை தமிழ்நாடு அரசிதழில் சிறப்பு வெளியிடாக வெளியிட அனுமதித்தும், மேற்படி சட்டத்தின் பிரிவு 19(4ன் படி இதர நிலைகளில் விளம்பரம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஆணை வெளியிடப்பட்டது.


2. நில நிர்வாக ஆணையர் அவர்கள். மேற்படி நில எடுப்பு பகுதிக்கான விளம்புகை அறிவிக்கையானது. 1.11.2021 அன்று உள்ளூர் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி நாளிதழ்களில் பிரசுரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நில எடுப்பு செய்யும் புலங்களுக்கு நில மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக, அப்புலங்களுக்கான வழிகாட்டி பதிவேட்டின் படியான மதிப்பு சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டது. அதில், அலகு-VI தொகுதி 11ல் உள்ள புல எண்களில் மட்டும். ஒரே புல எண்ணில் உள்ள உட்பிரிவுகளில் ஒன்றிற்கு வழிகாட்டி பதிவேட்டின் படியான மதிப்பு சதுர மீட்டரிலும், மற்றவற்றிற்கு வழிகாட்டி பதிவேட்டின் படியான மதிப்பு ஹெக்டேரிலும் வழங்கப்பட்டுள்ளது என்றும், நில எடுப்பு புலங்களுக்காக வழிகாட்டி பதிவேட்டின் படியான மதிப்பு வெவ்வேறாக உள்ள நிலையில், ஒரே புல எண்களில் உள்ள நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஒரே சீராக நிர்ணயம் செய்ய இயலாத நிலை உள்ளது என்றும் தெரிவித்து, இது தொடர்பாக, அலகு VI. தொகுதி-1ல் உள்ள நில எடுப்புப் புல எண்களுக்கு வழிகாட்டி பதிவேட்டின் படியான சரியான நில மதிப்பு நிர்ணயம் செய்து தரக்கேட்டு 8.10.2021 நாளிட்ட கடிதத்தில் சென்னை பதிவுத்துறை தலைவர் அவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


3. மேலும், மத்திய நில எடுப்புச் சட்டம், 2013-இன் பிரிவு 25ல் தெரிவித்துள்ளபடி. அலகு-VI குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களுக்கு தீர்வம் ஆணையானது 31-10-2022க்குள் பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும், அத்தகைய காலத்திற்குள் தீர்வம் பிறப்பிக்கப்படாத பொழுது நிலம் கையகப்படுத்தலுக்காக அனைத்து நடவடிக்கைகளும் காலாவதி ஆகிவிடும் எனவும் தெரிவித்தது. அலகு VIஇன் தொகுதி 11ல் உள்ள 1144,50 ஹெக்டேர் புன்செய் நிலங்களுக்கு மட்டும், அதற்கான கால அளவை மேலும் ஓராண்டு காலம் நீட்டித்து ஆணை வழங்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதை நில நிர்வாக ஆணையர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். நில நிர்வாக ஆணையரின் பரிந்துரையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்திலுள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் அலகு-VIஇன் தொகுதி 11க்கு தீர்வம் அளிப்பதற்கான கால அவகாசத்தினை 1.11.2022 முதல் மேலும் 12 மாதங்கள் நீட்டித்து அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.


4. மேலும் இந்த ஆணையுடன் அறிவிக்கையினை, நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை; மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம் 2013 இன் பிரிவு 25ன் படி. தமிழ்நாடு அரசிதழில் (சிறப்பு வெளியீடு வெளியிடுமாறும், வெளியிடப்பட்ட அறிவிக்கையின் 20 நகல்களை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறைக்கு அனுப்பி வைக்குமாறும், மேலாளர் அரசு மைய அச்சகம் சென்னை அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.” என குறிப்பிடப்பட்டிருந்தது