ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 6 மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி உள்ளது குறித்தும், 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது 450% கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியது குறித்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக சார்பில் பேசிய  வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டார்



பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கியபோது..


உலகமே தற்போது பயோ ஃப்யூயலை நம்பி உள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல்களை அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் சுயசார்பாக செயல்படும் சுயசார்பு பாரதம் என்ற நோக்கத்தோடு செல்லும் நிலையில் அரபு நாடுகளை நம்பி இருப்பது நல்ல விஷயம் இல்லை; இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலை பயன்படுத்துவது பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் நல்லதல்ல என்றார். தொடர்ந்து பேசிய அஸ்வத்தாமன், பயோ ஃப்யூயல் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளோம், எத்தனாலை பெட்ரோல், டீசல் உடன் கலந்து பயன்படுத்தி வருகிறோம். இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோலை அதிக அளவில் பயன்படுத்துவது நமது பொருளாதாரத்திற்கும் சுற்றுசூழலுக்கும் நல்லதல்ல என பேசினார்.


விலைவாசி குறைவாகவே உள்ளது


கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அந்த பயன் மக்களுக்கு செல்லவேண்டுமா? வேண்டாமா? என நெறியாளர் கேள்வி எழுப்பியபோது, பொருளாதாரத்தில் விலைவாசி ஏற்கெனவே குறைவாக உள்ளது எனக்கூறி சமாளித்தார். உடனே சுதாரித்த நெறியாளர் உடனே எந்த விலை வாசி குறைந்துள்ளது என கேட்க, "தமிழ்நாட்டில் ஒரு மாதமாக எல்லா பொருட்களும் விலையேறிவிட்டது. பருப்பு விலை காங்கிரஸ் ஆட்சியில் 250 ரூபாய்க்கு விற்றது ஆனால் தற்போது 150 ரூபாய்க்கு விற்கிறது, தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வுக்கு காரணம் திமுகதான்" என கூறி முடித்தார்



’’ஆம்லெட் விலையை ஏன் குறைக்கவில்லை?’


7 ஆண்டுகளில் 450% பெட்ரோல், டீசல் மீது கலால்வரி உயர்த்தப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு,


பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தினாலும் காய்கறி விலையை உயர்த்தாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்கிறது. வெங்காயம் விலை உயர்ந்தால் ஆம்லெட் விலையை உயர்த்தும் உணவகத்தினர் வெங்காயம் விலை குறைந்தால் ஆம்லெட் விலையை குறைப்பதில்லை என குற்றம் சாட்டினார்.


ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே 4 நாட்களுக்கு ஒரு சாமானியனுக்கு போதும்; 15 முதல் 20 ரூபாய் மட்டுமே அவரது பட்ஜெட்டில் அதிகமாகிறது. பெரிய கண்டெய்னரை கொண்டுபோய் நான் பெட்ரோல் போடப்போவது கிடையாது; காங்கிரஸ்காரர்கள் ஆடி, பி.எம்.டபிள்யூ வைத்திருப்பதால் பெட்ரோல் அதிக விலைக்கு போடுவது போல் எண்ணம் வரலாம், எங்களை போல பைக்கிலும் காரிலும் செல்பவர்களுக்கு வாரத்திற்கு 20 அதிகமாக ரூபாய் கொடுத்து பெட்ரோல் போடுவது என்பது நிச்சயமாக அதிகம் கிடையாது; அது எங்களை பாதிக்கவில்லை என்பதே உண்மை என பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக புதிய விளக்கத்தை அஸ்வத்தாமன் அளித்தார்.


’’பெட்ரோல் விலையை குறைந்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும்’’


அரபு நாடுகளில் இருந்து கிடைக்கும் பெட்ரோலை குறைக்க வேண்டும், பெட்ரோலை நம் ஊர் விவசாயிகளிடம் இருந்து உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் ஊக்குவிக்கிறோம் கரும்பு, நெல் விவசாயிகள் முந்திரி பழம் விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம்; நான் சொல்லும் விளக்கம் புரியவில்லை என்றால் மீண்டும் கேளுங்கள் நான் உங்களுக்கு திருப்பி விளக்குகிறேன். பெட்ரோல் விலை குறைவாக இருந்தால் அதை அனைவரும் பயன்படுத்துவார்கள் அதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என விநோத விளக்கத்தை கூறினார்.


முந்திரிப்பழத்தில் இருந்து பெட்ரோலா?


உமி, கோதுமை, முந்திரி பழத்தில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படும் என மீண்டும் கூறியபோது குறுக்கிட்ட நெறியாளர், முந்திரி பழத்தில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியுமா? எத்தனால் தயாரிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். உடனே சுதாரித்துக் கொண்ட அஸ்வத்தாமன் விவாதத்தின் தொடக்கத்தில் இருந்து முந்திரி பழத்தில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என கூறி வந்தவர் உடனே எத்தனால் என மாற்றிக் கொண்டது, விவாதத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் பார்வையாளர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது



’’எலாபரேட்டா இருக்கு... இருந்தாலும் நா சொன்னது இதான்...’


மக்கள் சூரிய ஒளி, மின்சாரம், எத்தனால் பெட்ரோலில் இயக்கும் மாற்று வாகனங்களை நோக்கி செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே மத்திய அரசு பெட்ரோல் விலையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது என புரிந்து கொள்ளலாமா? என்ற நெறியாளரின் கேள்விக்கு எக்ஸேட்லி…. கொஞ்சம் எலாபரேட்டா இருக்கு… இருந்தாலும் நான் சொன்ன விஷயம் இதுதான்  என தனது பேச்சை முடித்தார் அஸ்வத்தாமன்