மேலும் அறிய

இன்ஸ்டாகிராம் காதல் ; தங்கையை கண்டித்த அண்ணன் - கல்லூரி பெண் எடுத்த முடிவு

சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 19 வயது இளம் பெண் விஷம் குடித்தும் , தூக்கிட்டும் தற்கொலை

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகா தெற்கு மயிலோடை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் அபிசெல்வி ( வயது 19 ) இவர் கடந்த மூன்று வருடங்களாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற வாலிபரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது. அப்போது அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இக் காதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். வீட்டில் உள்ளோரின் எதிர்ப்பால் மனமுடைந்த அபிசெல்வி, இரண்டு வருடங்களுக்கு முன்பே வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கையை அடித்த அண்ணன்

குடும்பத்தினர் தடுத்த போதிலும், அபி செல்வி தொடர்ந்து சேலத்தைச் சேர்ந்த அந்த வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், கடந்த ஜூன் 9 - ம் அவர் இன்ஸ்டாவில் தனது காதலனுடன் தொடர்ந்து பேசி வந்ததை அவரது அண்ணன் சிவஞானம் நேரில் பார்த்துக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அண்ணன் சிவஞானம் தங்கை அபிசெல்வியை அடித்துக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் கோபமும் ஆத்திரமும் அடைந்த அபிசெல்வி, தனது வீட்டில் இருந்த கெமிக்கல் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். அதுமட்டுமின்றி கடுமையான மன உளைச்சலில் வீட்டின் அறைக்குள் சென்ற அவர், அங்கிருந்த சீலிங் பேனில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கயத்தார் போலீசார், அபிசெல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Erode power cut: ஈரோட்டில் நாளை (08-07-2026) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
ஈரோட்டில் நாளை (08-07-2026) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Embed widget