மத்திய அரசு அனைத்திலும் தோற்றுவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதம் செய்ததும் அதை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பியது அவர் பதவிக்காக அல்ல அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயக முறையில் போராடுகிற அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். போதை பொருள் அதிகரிப்பதாக பிஜேபி அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். போதை பொருள் பிஜேபி ஆளுகிற மாநிலங்களில் இருந்து தான் பல்வேறு இடங்களுக்கு செல்கிறது அதை அவர்கள் தான் தடுக்க வேண்டும். 

Continues below advertisement

மாவோயிஸ்டுகளை ஒழித்து விட்டதாக பிஜேபி அமைச்சர் கூறி வருகிறார். தலைமுறை மக்கள் சொந்த மண்ணில் பிறந்தவர்கள் அவர்களுடைய தேவைக்காக அவர்கள் போராடுகிறார்கள் அவை இந்தி கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் நியாயப்படுத்தாது. மகாத்மா காந்தி பெயரில் செயல்படுத்தப்பட்டு வந்த வேலைத்திட்டத்தை மாற்றி இருப்பது வெறுப்பு அரசியல் தான். பிஜேபி ஒன்றிய அரசு அனைத்திலும் தோற்றுப் போய்விட்டது அதை மறைக்கவே மடைமாற்று அரசியலை செய்து வருகிறது. தமிழ்நாடு நல்லிணக்க நாடு அதை ஒருபோதும் சீர்குலைக்க முடியாது. இலங்கையில் 100க்கும் மேற்பட்ட படகுகளையும் மீனவர்களையும் சிறை பிடித்து இருக்கிறது அதை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

திருப்பரங்குன்ற தீப ஏற்றும் நடவடிக்கையில் நீதிமன்றத்தை எதிர்த்தும் தமிழக முதல்வர் சரியான முறையில் கையாண்டதில் நிலைமை சரி செய்யப்பட்டது. திமுக தலைமைதான் கூட்டணி பலமாக உள்ளது. மீண்டும் எங்கள் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.