மேலும் அறிய

விஜய்க்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் - தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல் கண்டனம்

தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயல்: இந்திய கம்யூனிஸ்ட்

முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடம் 3ஆம் இடத்தில் ஒலிக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கட்சி தனது முதல் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடத்தில் ஒலிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப் பெரும் கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தை  ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வந்தார். குறுக்கு வழியில் ஆட்சியமைக்க பல்வேறு வழிகளில் நடந்த முயற்சிகளை முறியடிக்க,  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் கலந்தாலோசித்து  வழங்கிய ஆதரவின் அடிப்படையில் இன்று (10.05.2026) தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

 

அரசின் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவும்  நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு, வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும். “வந்தேமாதரம்” ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் “வந்தேமாதரம்” பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.  தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது. நாளை (11.05.2026) சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக கூடும் சட்டப்  பேரவைக் கூட்டத்திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தாற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலால் இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த பயங்கரம்
திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலால் இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த பயங்கரம்
சத்குருவின் கிருஷ்ண லீலா நூல்: வாழ்க்கை போராட்டமல்ல, விளையாட்டே!
சத்குருவின் கிருஷ்ண லீலா நூல்: வாழ்க்கை போராட்டமல்ல, விளையாட்டே!
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
மக்களே உஷாரு... தஞ்சையில் இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்காம்
மக்களே உஷாரு... தஞ்சையில் இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்காம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Netanyahu: பெய்ரூட் தாக்குதல்; இஸ்ரேலை கண்டித்து எச்சரிக்கையும் விடுத்த ட்ரம்ப்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
பெய்ரூட் தாக்குதல்; இஸ்ரேலை கண்டித்து எச்சரிக்கையும் விடுத்த ட்ரம்ப்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
France Modi Macron: பிரான்ஸில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026‘ மாநாடு; தொடங்கி வைத்த மேக்ரான்; பிரதமர் மோடி பேசியது என்ன.?
பிரான்ஸில் ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026‘ மாநாடு; தொடங்கி வைத்த மேக்ரான்; பிரதமர் மோடி பேசியது என்ன.?
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
ADMK: தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வழக்குகள்: நியாயமான விசாரணை நடக்குமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
US-Iran டீலுக்கு ஆப்பு.! ட்ரம்ப்புக்கு எதிராக செயல்படும் நெதன்யாகு; பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்
US-Iran டீலுக்கு ஆப்பு.! ட்ரம்ப்புக்கு எதிராக செயல்படும் நெதன்யாகு; பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்
TMC Quits NDA: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா; GK வாசன் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா; GK வாசன் கூறிய காரணம் என்ன தெரியுமா.?
190 கி.மீட்டர் முதல் 400 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் Simple Energy இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
190 கி.மீட்டர் முதல் 400 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் Simple Energy இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
US Iran Peace Deal: ‘தடை நீக்கம், டெஹ்ரானுக்கு நிவாரணம்‘; US-Iran ஒப்பந்தத்தில் உள்ளது என்ன.? வெளியான முக்கிய தகவல்
‘தடை நீக்கம், டெஹ்ரானுக்கு நிவாரணம்‘; US-Iran ஒப்பந்தத்தில் உள்ளது என்ன.? வெளியான முக்கிய தகவல்
54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்: காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
54 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டி அகற்றம்: காமாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
Embed widget