தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவாட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பரவி இருக்கும் தென் மேற்கு பருவ மழை , மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.06.2023 முதல் 16.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மடிப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்ச வெப்பநிலை :
13.06.2023: தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். ஒரு புறம் மழை இருந்தாலும் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு : (மில்லிமீட்டரில்)
கட்டப்பாக்கம் (காஞ்சிபுரம்) = 32.0, பாப்பரப்பட்டி (தர்மபுரி ) = 3.5, வம்பம் (புதுக்கோட்டை ) = 35.0, தூத்துக்குடி= 8.5, திருச்செந்தூர் (தூத்துக்குடி) = 1.0, சாத்தான்குளம் (தூத்துக்குடி) = 14.0, சிதம்பரம் (கடலூர்) = 3.5, விருத்தாசலம் (கடலூர்) = 4.5, சந்தியூர் (சேலம்) = 1.5, விரிஞ்சிபுரம் (வேலூர்) = 0.5, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) = 5.0, எம்ஆர்சி நகர் (சென்னை) = 2.5, சென்னை விமான நிலையம் = 3.2, வால்பாறை = 42.0, குன்னூர் = 15.0, உதகமண்டலம் = 4.0, கோயம்புத்தூர் விமான நிலையம் = 1.0, கொடைக்கானல் = 23.0, மதுரை விமான நிலையம் = 2.0, திருத்தணி = 6.0, தூத்துக்குடி = 5.0, சேலம் = 3.0 மிமீ மழை பதிவாகியுள்ளது.
OPS on Annamalai: ’கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..?’ அண்ணாமலைக்கு எதிராக கொந்தளித்த ஓ.பி.எஸ்..!