TOMATO PRICE: குவியல் குவியலாக கொட்டி கிடக்கும் தக்காளி.. அள்ளிச்செல்லும் மக்கள்- ஒரு கிலோ வெறும் இவ்வளவு தானா.!!
Tomato And Onion Price: தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதன் காரணமாக விலையானது சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையிலு 25 கிலோ கொண்ட தக்காளி பெட்டி 250 முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமையலில் காய்கறிகளின் பங்கு
சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது காய்கறிகள் தான். எனவே காய்கறி சந்தையில் மக்களின் கூட்டம் எப்போதும் அதிகரித்தே காணப்படும். அதிலும் மற்ற பச்சை காய்கறிகளை வாங்குவதை விட தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் அதிகளவில் வாங்குவார்கள். ரசம் முதல் பிரியாணி சமைப்பது என எது சமைப்பதாக இருந்தாலும் தங்காளி மற்றும் கட்டாய தேவையாக இருக்கும். எனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது போட்டி போட்டு உயர்ந்தது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்த நிலையில், தற்போது சரசரவென தக்காளி விலை குறைந்துள்ளது.
கொட்டிக்கிடக்கும் தக்காளி
குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயகோட்டை, உத்தனப்பள்ளி, மாகராஜகடை, பேரிகை, வேப்பனப்பள்ளி, சூளகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் 25 கிலோ எடை கொண்ட தக்காளி கூடை 200 ரூபாய் முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் அதிகளவில் தக்காளி வரத்து வருவதால் விலையானது மேலும் சரிந்துள்ளது. ஒரு கிலோ 3 முதல் 5 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.
25 கிலோ தக்காளி பெட்டி 300 ரூபாய்
விவசாயிகளிடம் இருந்து தக்காளியை வாங்கும் வியாபாரிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக காய்கறி சந்தையில் மக்கள் அதிகளவு தக்காளியை பை நிறைய வாங்கி செல்கிறார்கள். மேலும் வெங்காயத்தின் விலையும் குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் தரத்தை பொறுத்து 18 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. வெண்டைக்காய் ஒரு கிலோ 25- 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40- 45 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30- ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35-40 ரூபாய், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15- 20 ரூபாய்க்கும்,
கொத்தவரை ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், குடை மிளகாய் 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் கத்தரிக்காய் 30- 40 ரூபாய், பீன்ஸ் 40 ரூபாய், பீட்ரூட் ஒரு கிலோ 30 -35 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சுரைக்காய் 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.























