1. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 10 விசைப்படகுகளையும், 68 மீனவர்களையும் விடுவிக்க  செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால், இதுவரை  பத்து கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


2. 'மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கு ஒரு அண்ணனாக துறையின் அமைச்சராக தமிழக முதல்வரிடம் அவர்களின் கோரிக்கைகளை கொண்டு சேர்ப்பேன்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்.


3. கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட வழக்கில் மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


4. பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளி நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


5. தமிழ்நாடு வனப்பகுகளில் சுமார் 4,200 யானைகள் இருப்பதாக திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



6. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் புதிய நான்கு வழி சாலைப்பாலம் கட் டும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், தற்போதுள்ள சாலைப்பாலத்தை ரூ.16 கோடி செலவில் புதுப்பிக்கும் பணி நேற்று துவங்கியது.


7. 'மலைகளின் இளவர சி' என்றழைக்கப்படும் கொடைக்கானலில் டிசம்பர் குளிர்கால விடுமுறையை கொண்டாட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிரின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு குளிர்சீசன் காலதாமதமாக துவங்கியுள்ளது.


8. மதுரை பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வரும் ஜனவரி 15ம் தேதி நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவை அரசு வழிகாட்டுதல்படி நீதிமன்ற கட்டுப்பாடு களுடன் வழக்கம்போல் சிறப்பாக நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 


9. தியாகசீலர் கக்கன் அவர்களின் 40-வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைபட்டியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள், உயர்திரு மாவட்ட ஆட்சியர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


 


10. மலேசியாவில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்தவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒமைக்ரான் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் நகரசபை ஆணையாளர் ராஜாராம் உத்தரவின்பேரில் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் பசுவந்தனை ரோடு பகுதிக்கு சென்றனர். அங்கு பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் கயிறு கட்டி, `தடை செய்யப்பட்ட பகுதி' என அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர்.


 


11. தமிழகத்தில்,  அதிக பக்தர்கள்  வரும் கோயில்களில்  முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இந்நிலையில் பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி பழநி மலைக் கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் கணபதி ஹோமம் நடந்தது.


 


12. ராமநாதபுரம் வனத்துறையினர்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே பொட்டகவயல் விலக்கு பகுதியில் வயல்வெளியில் ஒருவர் வலை வைத்து பறவைகளை வேட்டையாடிக் கொண்டு இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக அவரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, அட்டவணை 4-ன் பிரிவின் கீழ் வரும் அரசால் தடை செய்யப்பட்ட  ஊசிவால் வாத்துகளை வேட்டையாடிய வீரனுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


 


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!