தேர்தலுக்காக திட்டம் போடும் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய புதிய அறிவிப்புகள் வெளியிட தயாராகி வருகிறது திமுக அரசு, ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக திரைமறைவில் ஆலோசனையை தொடங்கியுள்ளது. அதே நேரம் ஆளுங்கட்சியான திமுகவும் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வியூகங்களையும், திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை தொடர்பான வாக்குறுதி தான் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு சாதகமாக அமைந்தது.

Continues below advertisement

மகளிர் உரிமை தொகை எத்தனை பேருக்கு.?

எனவே 2023ஆம் ஆண்டு முதல் சுமார் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும், கூடுதல் பயணாளிகளை இணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத்தொகைகான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இதில் 29 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து இந்த விண்ணப்பித்தின் மீதான பரிசீலனை முடிவடைந்துள்ளது. வருகிற 12ஆம் தேதி முதல் புதிய பயணாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 1000 ரூபாயை வழங்கவுள்ளார். அந்த வகையில் சுமார் 29 லட்சம் விண்ணப்பங்களில் 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு

அடுத்த குஷியான அறிவிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ரூ 5000 பரிசு தொகை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் குடும்ப்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், பச்சரிசி, சக்கரை, வேட்டி மற்றும் சேலையோடு சேர்த்து கரும்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் நிதி நெருக்கடி காரணமாக ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்த நிலையில் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ. 5000 வழங்கப்பட இருப்பதாக தலைமைச்செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

பொதுமக்களுக்கு ரூ.5000 கிடைக்குமா.?

தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 5ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 2 கோடியே 27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. எனவே ஒவ்வொரு குடும்ப்ப அட்டைக்கும் தலா 5ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் 12ஆயிரம் கோடி அளவிற்கு நிதி ஒதுக்க வேண்டும். எனவே மக்களை மகிழ்விக்கும் வகையில் 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக இன்னும் ஓரிரு நாட்களில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.