மேலும் அறிய

'MONTHA' Cyclone: சென்னைக்கு 890 கி.மீ தூரத்தில் புயல் சின்னம்; தமிழகத்திற்கு மழை உண்டா.? வானிலை மையம் கூறுவது என்ன.?

சென்னைக்கு 890 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் சின்னம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 28-ம் தேதி மாலை கடக்கும் இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு மழை உண்டா என்பது குறித்து என்ன கூறப்பட்டுள்ளது.?

வாங்கக் கடலில் புயல் சின்னம் நிலைகொண்டுள்ள நிலையில், தற்போது உருவாகும் புயலுக்கு மோன்தா என பெயர் சூப்படப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புயல் சின்னம் சென்னைக்கு 890 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், படிப்படியாக அது வலுவடைந்து புயலாக மாறி, 28-ம் தேதி கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டிற்கான மழை குறித்து என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.

சென்னைக்கு 950 கி.மீ தூரத்தில் புயல் சின்னம்

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நேற்று(24-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, மாலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அது இன்று(25-10-2025) காலை ௦5:30 மணியளவில், மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ௦8:30 மணியளவில் அதே பகுதிகளில், அந்தமான் தீவுகளின் போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கு-தென்மேற்கு திசையில், சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 910 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 890 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்,  தொடர்ந்து 27-ம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ம் தேதி வாக்கில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்திற்கு இடையே, காக்கிநாடாவிற்கு அருகில், தீவிரப் புயலாக 28-ம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், அந்த சமயத்தில், காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், இந்த புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் அதன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Governor Ravi: மசோதாக்களின் நிலை என்ன.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களின் நிலை என்ன.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
Trump Vs Modi: “மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
“மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
TN Weather: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்.? புதிய புயலுக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்- எப்போ தெரியுமா.?
தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்.? புதிய புயலுக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்- எப்போ தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Governor Ravi: மசோதாக்களின் நிலை என்ன.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களின் நிலை என்ன.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
Trump Vs Modi: “மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
“மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
TN Weather: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்.? புதிய புயலுக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்- எப்போ தெரியுமா.?
தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்.? புதிய புயலுக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்- எப்போ தெரியுமா.?
Vaiko: எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
’’நாடு முழுவதும் தெரு நாய்களை உடனே அப்புறப்படுத்துக’’ உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு- எங்கிருந்தெல்லாம்?
MK STALIN: யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
யார் யாரோ திமுகவை அழித்து விட கனவு காண்கிறாங்க... தொட்டுக்கூட பார்க்க முடியாது- சீறும் ஸ்டாலின்
Flights Delay: பயணிகள் கவனத்திற்கு..! 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கியது - டெல்லி ATC-யில் சிக்கல்
Flights Delay: பயணிகள் கவனத்திற்கு..! 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை முடங்கியது - டெல்லி ATC-யில் சிக்கல்
Embed widget