சட்டவிரோதமாக வந்த பங்களாதேஷி.. எஸ்ஐ மகளுடன் திருமணம்.. 24 வருஷத்திற்கு பிறகு திருப்பூரில் சிக்கினார்
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு, திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர், திருப்பூரில் சிக்கியுள்ளார். காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முன்னாள் காவல்துறை அதிகாரியின் மகளை திருமணம் செய்து, திருப்பூரில் செட்டில் ஆகியுள்ளார். ஆதார், பான் கார்டு, லைசன்ஸ் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் அவர் மூன்று தேர்தல்களில் வாக்களித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்த பங்களாதேஷி:
திருப்பூரில் உள்ள கரைப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் சயான். கடந்த 2017 ஆம் ஆண்டு, இவர், தனது மனைவியின் பெயரில் கரைப்புதூரில் மூன்று சென்ட் நிலத்தை வாங்கி, நான்கு மாடி கட்டிடம் கட்டுவதற்காக ஒரு தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.43 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார். கட்டிடத்தை வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால், கட்டிடத்திற்கு நிதி நிறுவனம் சீல் வைத்துள்ளது.
நிதி நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விசாரணையின்போது, சயான், இந்திய நாட்டவர் அல்ல என்பது தெரிய வந்தது. இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, பான் கார்டு, ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றிருப்பதும் தெரியவந்தது.
24 வருஷத்திற்கு பிறகு திருப்பூரில் சிக்கியது எப்படி?
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் விரிவாக பேசுகையில், "கடந்த 2001 ஆம் ஆண்டு, இந்தியா-வங்காளதேச எல்லையை கால்நடையாகக் கடந்து வந்துள்ளார் சயான். ஆரம்பத்தில் சென்னையில் தையல்காரராகப் பணியாற்றி இருக்கிறார். பின்னர், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகள் கீதாவை மணந்து திருப்பூரில் குடியேறினார். கடந்த 2019ஆம் ஆண்டு, பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார். மூன்று முறை வங்கதேசத்திற்கு சென்று வந்துள்ளார். அவர் மூன்று தேர்தல்களில் வாக்களித்தார்" என்றார்.
"சயான் ஒரு இந்திய குடிமகனை மணந்திருந்தாலும், சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். எனவே, அவர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்படுவார். நாடுகடத்தப்பட்ட பிறகு, வெளிநாட்டு இந்திய குடிமகன் (OCI) அந்தஸ்துக்கு அவர் விண்ணப்பிக்கலாம். முதற்கட்ட விசாரணையில், அவருக்கு எந்த தடைசெய்யப்பட்ட அமைப்புடனும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வருகிறது" என திருப்பூர் எஸ்பி யாதவ் கிரிஷ் தெரிவித்துள்ளார்.
Before You Go
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
ட்ரெண்டிங் செய்திகள்






















