IIT hyperloop: சாதிக்கும் ஐஐடி சென்னை.. ஹைப்பர் லூப் டெக்னாலஜிக்காக, ஓடி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்
HyperLoop in India: "இந்தியாவின் ஹைப்பர் லூப் டெக்னாலஜி அடுத்த கட்ட ஆராய்ச்சிக்காக நகர்ந்து உள்ளது, இது தொடர்பாக வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது"

மனிதன் நாகரீகம் வளர்ச்சி அடைய தொடங்கிய நாள் முதல், இன்று வரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வளவு சீக்கிரமாக செல்ல புது புது போக்குவரத்து சாதனங்களை கண்டுபிடித்து வருகிறான். இன்றைய காலகட்டத்தில், பொதுப் போக்குவரத்தில் மிக வேகமாக செல்லக்கூடிய போக்குவரத்தாக, விமான போக்குவரத்து இருந்து வருகிறது. விமான போக்குவரத்து வேகமாக இருந்தாலும், ஆனால் அதன் விலை அதிகமாக இருந்து வருகிறது.
ஹைப்பர் லூப் என்றால் என்ன?- Hyper Loop Technology
போக்குவரத்தில் எதிர்காலத் தொழில்நுட்பம் என்பது ஹைப்பர் லுப். ஹைப்பர் லூப் என்பது நீண்ட தூரத்திற்கு இடையே அதிவேகமாக பயணம் செய்யக்கூடிய எதிர்கால போக்குவரத்து முறையாக உள்ளது. ஹைப்பர்லூப் என்பது ஒரு அதிவேக போக்குவரத்து அமைப்பு ஆகும்.
இது ஒரு தாழ்வான அழுத்தக் குழாயின் மூலம் பயணிக்கும் காப்ஸ்யூல்களைப் பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் நிலம் வழியாக விமானத்தை விட வேகமாக பயணிக்க முடியும். ஹைப்பர் லூப் காந்த விலக்கு மற்றும் குறைந்த உராய்வு மூலம் மணிக்கு 1,200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.
இந்தியாவில் ஹைப்பர் லூப் - Hyperloop technology in India
மத்திய ரயில்வே துறையின் நிதி உதவியுடன், சென்னை ஐஐடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஹைப்பர் லுக் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்னை ஐஐடி நிறுவனம் சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தையூர் டிஸ்கவரி வளாகத்தில் இதற்கான ஆய்வு மையத்தை அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
5 ஆண்டுகள் இலக்கு நிர்ணயம் செய்து, ஐந்து ஆண்டுகளுக்குள் ஹைப்பர் லூப் ரயிலை இயக்குவதற்கான ஆய்வுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நிறுவனங்களின் நம்பிக்கைகளை சென்னை ஐஐடியின் ஆய்வுக் குழு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றன.
அடுத்த கட்ட ஆராய்ச்சிகள்
ஹைப்பர் லூப் ரயிலுக்கான உந்துவிசை, கட்டமைப்பு வடிவமைப்பு, உள்கட்ட அமைப்பு, கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி நாட்டின் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்கிய, சிஸ்ட்ரா நிறுவனமும் இந்த புரிந்துணர் ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளது. இதன் மூலம் சென்னை ஐஐடியின் ஹைப்பர் லூப் லுக் ரயில் ஆராய்ச்சி வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.