Easy- யா நீங்களே பார்க்கலாம் "திருமண பொருத்தம்"...?

 திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது முதலில் நாம் கேட்பது ஜாதகம் தான்.... ஜாதகத்தில் மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் கேட்டுவிட்டு பிறகு கல்யாண பேச்சு வார்த்தையை ஆரம்பிப்பார்கள்...

 ஆண் உடைய நட்சத்திரம் பெண் உடைய நட்சத்திரமும் ஏறக்குறைய ஐந்திற்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தால் நல்ல பொருத்தம் என்கிறோம்... இதில் எனக்கு மாறுபாடான கருத்து உண்டு நட்சத்திரம் மட்டுமே பொருத்தங்களை தீர்மானிப்பது இல்லை மாறாக ஜாதகத்தையும் பார்க்க வேண்டும்... பத்து பொருத்தத்திற்கு 9 பொருத்தம் சரியாக வருகிறது என்று கூறிய எத்தனையோ ஆண் பெண் ஜாதகர்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து போனதை நான் பார்த்திருக்கிறேன்...

 நான்கு பொருத்தம்தான் இருக்கிறது என்று சொன்ன ஜோடிகள் சண்டை போட்டுக் கொண்டே ஒரே வீட்டில் 70 வயது வரை வாழ்ந்ததையும் பார்த்திருக்கிறோம்...

 இருந்தது "5" பொருத்தம் - வாழ்ந்தது "50" ஆண்டுகள் எப்படி..?

 பெரும்பாலான காதல் திருமணங்களில் பொருத்தங்கள் பார்ப்பதில்லை மனங்கள் இணைந்து விட்டது. பெரியோர்களே திருமணத்தை ஏற்பாடு செய்து விடுகிறார்கள் அல்லது காதலர்களே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டு ஒன்றாக வாழ்கிறார்கள்.. அது எப்படி அவர்கள் மட்டும் பொருத்தம் பார்க்காமல் நீண்ட நாட்களாக குழந்தை குட்டியோடு ஒன்றாக வாழ முடியும்... இதற்கு காரணம் நட்சத்திர பொருத்தங்களை தாண்டி ஜாதக அமைப்புகள் தசா புத்தி அமைப்புகள் சுக்கிரனின் வலிமை பெண்ணுக்கு செவ்வாயின் வலிமை போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்...

 ஒருவரின் ஜாதகத்தில் வெறும் ஐந்து பொருத்தங்கள் இருந்தாலும் கூட ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் வலிமையாக இருந்து ராகு கேதுக்களுடன் சேராமல் நல்ல நிலைமையில் இருந்தால் நிச்சயமாக திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் குறிப்பாக ஏழாம் இடம் எட்டாமிடம் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும்... அதேபோல் பின்னுக்கும் செவ்வாய் நல்ல நிலைமை இருந்து ராகு கேதுக்களுடன் சேராமல் இருக்க ஏழாம் இடமும் வலிமையாக இருந்தால் நீண்ட நாட்களாக கணவனோடு சிறப்பாக வாழலாம்...

 நீங்களே ஈஸியா பொருத்தம் பார்க்கலாம்..!!!

 நீங்கள் ஆணாக இருந்தால் பார்க்கின்ற பெண் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் லக்னத்திற்கு ஏழாம் இடம் ராகு கேதுக்கள் இல்லாமல் இருக்க வேண்டும் ஏழாம் இடத்து அதிபதி நீச்சமாகாமல் இருக்க வேண்டும் ஏழாம் இடத்தில் இருசக்கரகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும் இப்படி இருந்தால் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது அதே போல ராகு கேதுக்கள் திசை நடக்காமல் இருத்தல் நல்லது...

 நீங்கள் பெண்ணாக இருந்தால் ஆண் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடம் சிறப்பாக இருக்க வேண்டும் செவ்வாய் ராகு கேதுக்களுடன் சேர்ந்து கெடாமல் இருக்க வேண்டும் அதேபோல எட்டாம் இடம் என்று சொல்லக்கூடிய மாங்கல்யம் தானம் ராகு கேதுக்களால் பிடிக்கப்படாமல் இருக்க வேண்டும் அப்படி ஏழு, எட்டு இரண்டாம் இடங்களில் ராகு கேதுக்கள் இருந்து தசை நடத்தினால் திருமணத்தை தள்ளி போடுவது நல்லது...

 நட்சத்திரம் பொருத்தங்கள் பார்க்க வேண்டாமா?

 நட்சத்திர பொருத்தங்களும் பார்க்க வேண்டும் அதை தாண்டி ஏழாம் இடத்தில் ராகு கேதுவோ எட்டாம் இடத்தில் ராகு கேதுவோர் இருக்கக் கூடாது அப்படி இருந்தால் சில சங்கடங்களோடு வாழ்க்கை வாழ நேரிடும்...