இந்தியாவில் மக்களின் அத்தியாவசிய தேவைப்பொருட்களில் ஒன்றாக சிலிண்டர் உள்ளது. விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த பலரின் பிரச்னைகளுக்கு மிகப்பெரிய தீர்வாக அமைந்தது இந்த எரிவாயு சிலிண்டர்.


சமையல் சிலிண்டர்:

கோடிக்கணக்கான குடும்பத்தினர் இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்களுக்கான சிலிண்டர்களை பெரும்பாலும் இண்டேன் கேஸ், எச்.பி. மற்றும் பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்தே சிலிண்டர்கள் வாங்கப்படுகிறது.


சிலிண்டர்கள் முடிந்துவிட்டால் அடுத்த சிலிண்டர் வாங்குவதற்குள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும். சில பகுதிகளில் சமையல் சிலிண்டர் முடிந்துவிட்டால் சிலிண்டர் விநியோகிப்பவர்களுக்கு செல்போன் மூலமாக அழைப்பு விடுப்பதும், சாதாரண குறுஞ்செய்தி மூலமாகவும் குறுஞ்செய்தி அனுப்புவது வழக்கமாக உள்ளது.

வாட்ஸ் அப்பில் புக்கிங் செய்வது எப்படி? | LPG Cylinder Booking Whatsapp Number 

வாட்ஸ் அப் மூலமாகவும் சமையல் சிலிண்டரை புக்கிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், அதில் பலருக்கு சந்தேகங்கள் இருக்கின்றன. அதைத் தீர்க்கவே இச்செய்தி


இண்டேன் கேஸ் – 75888 88824
எச்பி                        - 92222 01122
பாரத் கேஸ்           - 18002 24344

மேலே கூறியவற்றில் எந்த நிறுவனத்திடம் இருந்து சிலிண்டர்கள் வாங்குகிறீர்களோ அந்த நிறுவனத்தின் எண்ணைப் பதிவு செய்து, அந்த எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாக HI என்ற குறுஞ்செய்தி அனுப்பவும். அப்போது, உங்களுக்கு ஆட்டோ பூயல், குக்கிங் கேஸ், ஏவியேஷன் பயூல் என மொத்தம் 7 ஆப்சஷன்கள் வழங்கப்படும்.


அதன் கீழேயே 13 மொழிகளில் தொடர்பு கொள்ளலாம் என்ற ஆப்ஷனும் இருக்கும். அதில் தமிழ், ஆங்கிலம் என உங்களுக்கு ஏதுவான மொழியைத் தேரவு செய்தும் கொள்ளலாம்.


இதில், மெயின் மெனு ஆப்ஷன் உள்ளே சென்றால் Book Cylinder for Others என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின்னர், சமையல் சிலிண்டர் வாங்குவதற்கு பதிவு செய்துள்ள 10 இலக்கத்திலான உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்ய வேண்டும்.


இவ்வாறு புக் செய்வதன் மூலமாக உடனடியாக தாமதமின்றி நீங்கள் சிலிண்டர் வாங்க முடியும். இனி மழைக்காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் அதிகளவு சிலிண்டரை பயன்படுத்துவார்கள் என்பதால் சிலிண்டரை உடனடியாக தாமதமின்றி பெற இந்த வழிகளை பின்பற்றலாம்.