நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கண்மணி மாவீரன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரியவகை கனிமங்கள் மற்றும் மணலை வேறு மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 50 குவாரிகள் அரசு அனுமதி பெற்று நடைபெற்று வருகிறது. இந்த குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் மண் மற்றும் கற்களுக்கு எவ்வித பதிவேடு இன்றி வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கொரோனா, ஒமிக்ரான் பரவல் எதிரொலி - போளூர், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சுவிரட்டு நடத்த தடை

 



 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Watch Video: TVS XL வாகனத்தை பேட்டரி வாகனமாக மாற்றிய விவசாயி - எவ்வுளோ மையிலேஜ் தருதுன்னு தெரியுமா?

இதனால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு, அதிக விலைக்கு கற்கள் மற்றும் மணலை வாங்கும் நிலை உள்ளது. இது போன்ற அரிய வகை கனிமங்கள் மற்றும் மணலை வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க, தமிழக எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்க வேண்டுமென உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படும் அரியவகை கனிமங்கள் மற்றும் மணலை தடுப்பதற்கு நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறப்பு சோதனைச் சாவடி அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- அன்று எடப்பாடி...! இன்று ஆத்தூர்...! - இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம்?