கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் 2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 1969 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, கருணாநிதி தலைமையில் திமுக 12 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்திருக்கிறது. ஜெயலலிதா தலைமையில் கிட்டத்தட்ட 8 நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக சந்தித்திருக்கிறது.
2019 vs 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:
தமிழ்நாட்டின் 2019 நாடளுமன்றத் தேர்தலில் திமுக அங்கம் வகித்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38 இடங்களை ஸ்வீப் செய்தது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தன்னிச்சையாக போட்டியிட்டு 38 தொகுதிகளில் 37 இடங்களை கைப்பற்றியது.
அதாவது, இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளிலும் 'முழு ஸ்வீப்' வெற்றி உறுதி செய்யப்பட்டது. இரண்டு தேர்தலுக்குமான பிந்தைய கருத்துக் கணிப்புகள் எவையும் முழு ஸ்வீப் என்பதை கணிக்கவில்லை.
இருப்பினும், இந்த இரண்டு ஸ்வீப்களுக்கு பின்னால் இயங்கும் அரசியல் களங்கள் பல்வேறு மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. இந்த மாறுபாட்டை - மாநில சுயாட்சி- மத்தியில் கூட்டாச்சி, ஜாதி அடையாள அரசியல், அரசியல் பன்முகத்தன்மை, மதவாதத்தை முன்னெடுக்கும் பெரும்பான்மை அரசியல், வெகுஜன நலத்திட்டங்களை முன்னெடுக்கும் திராவிட அரசியல் போன்ற பல அரசியல் சொல்லாடல்கள் உருவாக்குகின்றன. இந்த மாறுபாடுகள் நேற்றைய, இன்றைய, நாளைய தமிழக அரசியலோடு தொடர்புடையது. உதாரணமாக, 2016 நாடாளுமன்றத் தேர்தல் நான்கு முனை போட்டியாக இருந்து. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கூட்டணியில் இருந்து விலகியது. விசிக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக தேர்தலை சந்தித்தது. 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக் கட்சிகள் தோல்வியடைந்தன.
அஇஅதிமுக 39 தொகுதிகளில் தன்னிச்சையாக போட்டியிட்டு 37 இடங்களை கைப்பற்றியது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக என்று இருபெரிய தேசிய கட்சிகள் திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தேர்தலை சந்தித்தன. பாஜகவின் தேசிய முற்போக்கு கூட்டணியில் பாமக, தேமுதிக, கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. இதில், பாஜக கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதியிலும், பாமக தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றன.
இந்த தேர்தலில் 39 தொகுதிகளில் தன்னிச்சையாக போட்டியிட்ட காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியுற்றது. இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அடியாக விழுந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதன் வாக்கு வங்கி 10.72 சதவீதமாக குறைந்தது.
2014 ஸ்வீப்க்கான காரணம் என்ன?
2009-2014 காலத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமயிலான ஜனநாயாக முற்போக்கு கூட்டணிக்கு எதிரான மனநிலை தமிழகத்தில் இருந்ததாக சிஎஸ்டிஎஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்தது. அதன் அடிப்படையில் திமுக-வுக்கு எதிரான மனநிலையும் தமிழகத்தில் காணப்பட்டது. மேலும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி தமிழகத்தில் போதிய செல்வாக்கை பெறவில்லை. இவை அனைத்தும், அஇஅதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது.
பொதுவாக, திராவிடக் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மத்திய அமைச்சர்கள் பதிவியை கேட்டுப் பெறுவது வழக்கம். ஆனால், 2014-இல் ஜெயலலிதா தன்னை தேசிய தலைவராக முன்னிலைப்படுத்தினார். அறுதிப் பெரும்பான்மை பாஜகவுக்கு கிடைக்காது என்பதை உணர்ந்த ஜெயலலிதா பிரதமர் பதவியை நேரடியாகவே குறிவைத்தார். தேர்தல் பிரசாரங்களும் அதன் அடிப்படையிலேயே அமைந்தன. ஜார்ஜ் கோட்டையில் இருந்து செங்கோட்டை என்ற தேர்தல் முழக்கங்கள் பிரபலமடைந்தன.
வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது/ மத்திய அரசு துரோகம்/ நில சுயாட்சி போன்ற அடிப்படை சொல்லாடலை ஜெயலலிதா முன்னெடுக்கவில்லை. மாறாக, தனது நிர்வாகத் திறமை, அரசியல் ஆளுமை, நலத்திட்ட உதவிகளை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். மோடியா/ லேடியா என்ற அவரின் வசனம் மத்திய அரசா? மாநில அரசா? என்பதைத் தாண்டி யார் சிறந்த மாநில முதல்வர்கள் என்ற கேள்வியை எழுப்பவுதாக அமைகிறது.
சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, தமிழகத்தில் 16 சதவீதம் பேர் ஜெயலலிதாவையும், 14 சதவீதம் பேர் நரேந்திர மோடியையும் தேர்வு செய்ததாக சிஎஸ்டிஎஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.
2014-இல் ஜெயலலிதா தேசியத் தலைவராக வந்திருந்தால், திராவிட அரசியலின் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கும்.
2019 ஸ்வீப்க்கான காரணம் என்ன?
2016-இல் அதிமுக தலைவர் ஜெயலலிதா மரணமடைந்தார், திமுக தலைவர் கருணாநிதி 2018-இல் இயற்கை எய்தினார். 2019 தேர்தலில் காங்கிரஸ், விசிக , சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய கூட்டணியை திமுக கட்டமைத்தது. 2014 தேர்தலை விட குறைவான நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. 2014-இல் மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக முன்னெடுத்த பல்வேறு திட்டங்களை திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்க்கத் தொடங்கின. இந்தி மொழி திணிப்பு, ஜிஎஸ்டி சட்டம், நீட் தேர்வு, மாநில அரசு நிதி ஒதுக்கீடு, ஆளுநர் அதிகாரம், பண மதிப்பு நீக்கம் போன்ற நிகழ்வுகள் மூலம் மோடியின் பெரும்பானை அரசுக்கு எதிரான ஒரு வலுவான கட்டமைப்பை திமுக உருவாக்கியது.
மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம், எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், மது ஒழிப்பு டெல்லியில் விவசாயிகள் போராட்டம் போன்ற கட்சி சாராத போரட்டங்களும் மாநில சுயாட்சி பற்றிய கேள்விகளை மீண்டும் தட்டி எழுப்பியது. 2014 நாடளுமன்றத் தேர்தலைப்போல் அல்லாமால், 2019 தேர்தல் தமிழக ஜனநாயகத்தின் பன்முகத் தன்மையை வெளிபடுத்தியது. வெகுஜன மக்கள் போராட்டங்கள் அரசியல் களம் அமைத்தன. ரஜினிகாந்த் (அரசியல் வருகையை அறிவித்திருந்தார்), கமல்ஹாசன், டிடிவி தினகரன், நாம் தமிழர் சீமான் போன்ற அரசியல் தலைவர்கள் வருகை நாடளுமன்றத் தேர்தலை மேலும் ஆழமாக்கியது.
பாஜக, பாமக, அதிமுக கூட்டணி போட்டோயிட்ட 39 தொகுதிகளில் 38 இடங்களில் தோல்வியுற்றன. கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேடப்ளார் தோற்கடிக்கப்பட்டார். தர்மபுரியில் பாமக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார். இது, 2014 நாடாளுமன்றத் தேர்தல் அளித்த ஊக்கத்தினால், 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தன்னிச்சையாக தேர்தலை சந்தித்தது வெற்றி பெற்றார். 2016, 2016 தேர்தல்களில் ஜெயலலிதா எடுத்த முடிவு தமிழக அரசியலில் கூட்டணி கலாச்சாரத்தை மாற்றியமைக்க மாற்றியமைத்தன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த படுதோல்வியால், நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்தித்து என்பது குறிப்பிடத்தக்கது