வடக்கு தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று 7-ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் 8-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
07.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
08.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.05.2023 முதல் 10.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
07.05.2023 முதல் 11.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
RSCL வல்லம் (விழுப்புரம்), விராலிமலை (புதுக்கோட்டை) தலா 9, BASL முகையூர் (விழுப்புரம்), தல்லாகுளம் (மதுரை) தலா 8, தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), வலங்கைமான் (திருவாரூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), கெட்டி (நீலகிரி) , RSCl-2 நெமூர் (விழுப்புரம்) தலா 7, செஞ்சி (விழுப்புரம்), டேனிஷ்பேட்டை (சேலம்), RSL-2 கேதார் (விழுப்புரம்), சென்னிமலை (ஈரோடு), வேப்பூர் (கடலூர்), கொடவாசல் (திருவாரூர்), RSL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பெலாந்துறை (கடலூர்), மதுரை தெற்கு (மதுரை), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), மதுரை வடக்கு (மதுரை) தலா 6, நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), கோடநாடு (நீலகிரி), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), மீ மாத்தூர் (கடலூர்), திருவாரூர், அன்னவாசல் (புதுக்கோட்டை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 5 செ மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
07.05.2023 மற்றும் 08.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
09.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
10.05.2023 மற்றும் 11.05.2023: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் 08.05.2023 தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.