Heavy Rain in Salem: அக்னி நட்சத்திரத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை - கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சேலம்.

Yercaud Rain: திடீர் மலையால் ஏற்காட்டில் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

Continues below advertisement

தமிழக முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஒரு மாதத்தை கடந்து 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் பதிவாகி வந்தது. அதிகபட்சமாக 108 டிகிரிக்கு மேல் வெப்பத்தின் தாக்கம் பதிவானதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழல் இருந்தது. 

Continues below advertisement

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாகவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக சேலம் மாநகர் பகுதிகளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நான்கு ரோடு, ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம், கடைவீதி, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமானது முதல் கனமழை வரை மழை பொழிந்தது.

கோடை வெயிலில் தாக்கத்தால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக பொழிந்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக கத்திரி வெயில் துவங்கியுள்ள நிலையில் வெப்பம் வாட்டி வதைக்கும் என்று மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில் கடந்த 5 நாட்களாகவே சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் சேலம் மாவட்டத்தில் குறைந்துள்ளது.

இதேபோல், ஏற்காட்டில் கடந்த ஐந்து நாட்களாக கடும் பணி நிலவி வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் ஏற்காட்டில் காட்டும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக, ஏற்காடு பேருந்து நிலையம் படகு இல்லம், அண்ணா பூங்கா, சேர்வுராயன் மலை, லேடிஸ் சீட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் திடீர் மலையால் ஏற்காட்டில் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது.

இந்த திடீர் நீர்வீழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola