ராமேசுவரத்தில் அதிகனமழை:
ராமேசுவர மாவட்டத்தில் இன்று காலை 6 மணிமுதல் மாலை 4 மணிவரையிலான 10 மணி நேர இடைவெளியில், 41.1 செ.மீ ( 411 மி.மீ) அதிகனமழை பெய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சமீபகாலமாக பெய்த மழையின் அளவை ஒப்பிடுகையில் மிகப்பெரிய அளவாக பார்க்கப்படுகிறது. இதனால், சில சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவு நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரத்தில் 10 மணி நேரத்தில் 41.1 செ.மீ மழையளவும், பாம்பனில் 23.7 செ.மீ மழையளவும், தங்கச்சி மடத்தில் 32.2 செ.மீ மழையளவும் பெய்துள்ளது.
பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையிலான 3 மணிநேர கால அளவில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
காரணம் என்ன?
இந்நிலையில் , அதிகனமழை குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதன் காரணமாக , குறைந்த நேரத்தில், அதிகனமழை பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் வரும் நவம்பர் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விவரம்:
21.11.2024 முதல் 24.11.2024 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.11.2024 முதல் 24.11.2024 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.11.2024:
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26.11.2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள். காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.