Tamil Nadu Weather Forecast: "காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது"

Continues below advertisement

டிட்வா புயல் நிலவரம் என்ன ?

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலானது வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, “ தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் மற்றும் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் கடந்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கிட்டத்தட்ட நிலையாக இருந்தது.

நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் மையம் கொண்டது. அதாவது சென்னை (இந்தியா) க்கு கிழக்கே சுமார் 50 கிமீ, புதுச்சேரி (இந்தியா) க்கு வடகிழக்கே 140 கிமீ, கடலூர் (இந்தியா) க்கு வடகிழக்கே 160 கிமீ, நெல்லூருக்கு தென்கிழக்கே 170 கிமீ. வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளிலிருந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் மையத்தின் குறைந்தபட்ச தூரம் சுமார் 35 கிமீ ஆகும். இது மெதுவாக தென்மேற்கு நோக்கி வளைந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளது.

Continues below advertisement

காஞ்சிபுரம் வானிலை முன்னறிவிப்பு - Kanchipuram Weather Forecast Today 

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கத்தில் அதிகபட்சமாக 3.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோன்று குன்றத்தூரில் மூன்று 3.35 சென்டிமீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 2.9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 5.4 மில்லி மீட்டர் மழையும், உத்திரமேரூரில் 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை இன்று (02-12-2025) மாலை வரை கனமழைக்க வைத்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்ட வானிலை நிலவரம் - Thiruvallur Weather Forecast Today 

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வந்தது. திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு, பழவேற்காடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று பகல் 12 மணி வரை 2.5 சென்டிமீட்டர் மட்டுமே பதிவாகி இருந்தது. பிற்பகலில் துவங்கிய மழை மாலை 5 மணி வரை நீடித்தது. 12 மணியிலிருந்து மாலை 5 மணி வரை 5 மணி நேரத்தில், 10 சென்டிமீட்டர் கனமழை பதிவாகியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சோழவரம் பகுதியில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. 

திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (02-12-2025) காலை 8:30 மணி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன் பிறகு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது 

செங்கல்பட்டு வானிலை நிலவரம் - Chengalpattu Weather Forecast Today 

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை நேற்று காலையிலிருந்து அவ்வப்போது மழை பெய்து வந்தது. தாம்பரம், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளிலும் அவ்வப்போதும் மழை பெய்து வந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை வானிலை நிலவரம் - Ranipet Weather Forecast Today 

ராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரை இன்று காலை 8: 30 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.