தமிழ்நாடு :
- வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம் மற்றும் புதுவையில் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.
- முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்தது, இடுக்கி ஆட்சியருக்கு எச்சரிகை கடிதம் அனுப்பிய தமிழக பொதுப்பணி துறை.
- 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.
- அரசாணை எண் 115 ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் வலியுறுத்தல்
- குரோம்பேட்டையில் மழைநீர் கால்வாய் பணியின் போது தண்ணீர் அகற்றாமல் கான்கிரீட் போட்ட விவகாரம் - இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம்.
- காரைக்கால் கனமழை காரணமாக 2000 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதம், வாய்கால் தூர்வாராததே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு.
- சந்திர கிரகணம் முடிந்ததும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- காவிரி கரையோரம் உள்ள கோயில்களில் துலா உற்சவம் கோலாகளம். காமதேனு சுவாமி வீதி உலா- பக்தர்கள் பரவசம்.
- வால்பாறை மலைப்பாதையில் குட்டிகளுடன் சுற்றி திரியும் காட்டு யானைகள், கூட்டமாக நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சம்.
இந்தியா:
- நேபாளத்தில் ரிக்டர் 6.3 அளவு நில நடுக்கம் ஏற்பட்டத்தில் 3 பேர் பலி, மணிப்பூர், டெல்லி வரை அதிர்வுகள் உணரப்பட்டதால் பொது மக்கள் அச்சம்.
- ஓ.பி.சி பிரிவின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாது, உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மத்திய அரசு பதில்.
- ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்ப்பது 130 கோடி இந்தியர்களுக்கு பெருமை- பிரதமர் நரேந்திர மோடி
- பிரதமர் மோடி தலைமையில் 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமையும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நம்பிக்கை.
- இஸ்ரோ குழுவில் நீலகிரி மாவட்ட பழங்குடியின மாணவர்கள், அகஸ்தியர் செயற்கைகோள் தயாரிப்பிற்காக மாணவர்களுக்கு பயிற்சி
- லாரி மூலம் கேரளாவிலிருந்து தெலுங்கானாவிற்கு பயணம் செய்யும் விமானம். நெடுஞ்சாலையில் நின்றிருந்ததை கண்டு வியந்த பொது மக்கள்.
உலகம்:
- நைஜீரியாவில் இந்திய சிப்பந்திகள் 16 பேர் உள்பட 26 பேர் கைது, நாடு திரும்ப முடியாமல் இரண்டு மாதங்களாக வேதனை.
- தாய்லாந்தில் கலைக்கட்டிய லாந்தர் திருவிழா, விளக்குகளை பறக்க விட்டு மக்கள் உற்சாகம்.
- பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும், பணக்கார நாடுகளுக்கு பாதிக்கப்பட்ட நாடுகள் கோரிக்கை.
விளையாட்டு:
- 20 ஓவர் உலக கோப்பையில் முதல் அரை இறுதியில் வெள்ளப்போவது யார்? இன்று நடைபெரும் போட்டியில் பாகிஸ்தான் நியூஸிலாந்த் அணிகள் பலப்பரிட்சை
- இந்திய சூப்பர் லீக் ஆட்டத்தில் ஜம்ஷெத்பூர் மற்றும் ஹைதரபாத் இடையே போட்டி.