மின்துறையில் ஹார்டு டிஸ்க் திருட்டு, சிபிசிஐடி விசாரணை: தவெக அரசிடம் அதிமுக சரமாரிக் கேள்வி!
இது வெறும் Hard Disk திருட்டு மட்டுமல்ல. தரவுகள் திருடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. Data Theft பற்றி உங்கள் அரசின் காவல்துறையே விசாரிப்பதை இனிமேல் எப்படி நம்ப முடியும்?- அதிமுக.

மின்சார வாரியத்தில் ஹார்டு டிஸ்குகள், திருடு போன முதல் நாளே செய்ய வேண்டிய வேலையை ஏறத்தாழ ஒரு வாரம் Delay செய்துள்ளதன் பின்னணி என்ன என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து, பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், மின்துறை தலைமை அலுவலகத்தின் முக்கியமான துறைகளில் இருந்த ஒருசில ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டு கால ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த திருட்டின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என முழுமையான விசாரணைக்கு முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக ஐ.டி. விங் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’மின்துறையில் Hard Disk திருடு போன வழக்கை ஏன் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கவில்லை என நாம் 3 நாட்கள் முன்பு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது மிகவும் தாமதமாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பொய்க்கால் குதிரை அரசு.
இதற்கு எதற்கு இத்தனை நாட்கள்?
திருடு போன முதல் நாளே செய்ய வேண்டிய வேலையை ஏறத்தாழ ஒரு வாரம் Delay செய்துள்ளதன் பின்னணி என்ன? செய்திகளில் வரும் வரை இதுபற்றி அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் தராமல் மறைத்து வைத்திருந்ததே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்துறையில் Hard Disk திருடு போன வழக்கை ஏன் CBCID- யிடம் ஒப்படைக்கவில்லை என நாம் 3 நாட்கள் முன்பு கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) June 8, 2026
தற்போது மிகவும் தாமதமாக CBCID விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பொய்க்கால் குதிரை அரசு.
இதற்கு எதற்கு இத்தனை நாட்கள்?
திருடு போன முதல் நாளே செய்ய… pic.twitter.com/PjKU4BPjtc
இது வெறும் Hard Disk திருட்டு மட்டுமல்ல. தரவுகள் திருடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. Data Theft பற்றி உங்கள் அரசின் காவல்துறையே விசாரிப்பதை இனிமேல் எப்படி நம்ப முடியும்?
நியாயமான விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும் எனில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியபடி CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று அதிமுக ஐ.டி. விங் தெரிவித்துள்ளது.
Before You Go
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
ட்ரெண்டிங் செய்திகள்























