Happy New Year 2022: ஒரு பக்கம் மழை.. மறுபக்கம் கட்டுப்பாடு.. நியூ இயரில் குறைந்த மது விற்பனை.!! விவரம்!

கடந்தாண்டு புத்தாண்டின்போது ரூ.159 கோடியில் மதுவிற்பனையான நிலையில் இந்தாண்டு ரூ.12 கோடி குறைந்துள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடி மதிப்பில் மது விற்பனையாகியுள்ளது. 

Continues below advertisement

உலகம் முழுவதும் நேற்று 2022 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். கொரோனா உள்ளிட்ட பல பிரச்னைகள் மக்கள் மத்தியில் இருக்கிறது. அது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஒருநாள் ஆவது, வரவுள்ள புத்தாண்டை நல்லவிதமாகவும், மகிழ்ச்சியாகவும் வரவேற்போம் என்று பலர் எண்ணி, ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ப மகிழ்ச்சியாக வரவேற்றனர். சிலர், நண்பர்களுடன் வெளியில் சென்றும், சிலர் விதவிதமான மதுவகைகளை வாங்கிக்கொண்டும் சந்தோஷமாக (மது உடலுக்கு கெட்டது எனத் தெரிந்தும்) குடித்து மகிழ்வார்கள்.

அந்த வகையில், நேற்று பலரும் நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து உற்சாகத்துடன் இருந்தனர். இந்த நிலையில், இந்த புத்தாண்டிற்கு  எவ்வளவு மதுவிற்பனையாகியுள்ளது என்ற நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, தமிழ்நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடி மதிப்பில் மது விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு புத்தாண்டின்போது ரூ.159 கோடியில் மதுவிற்பனையான நிலையில் இந்தாண்டு ரூ.12 கோடி குறைந்துள்ளது. 
தொடர்மழை, சபரிமலை சீசன் மற்றும் திறந்தவெளி கொண்டாட்டத்திற்கு தடை காரணமாக விற்பனையில் சரிவு எனக் கூறப்படுகிறது.

மண்டல வாரியாக மது விற்பனை

சென்னை மண்டலம் - ரூ.41.45 கோடி, மதுரை மண்டலம் - ரூ.27.44 கோடி, கோவை மண்டலம் - ரூ.26.85 கோடி, திருச்சி மண்டலம் - ரூ.26.52 கோடி, சேலம் மண்டலம் - ரூ.25.43 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

 

இதனிடையே, கர்நாடகாவில் குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள் வாங்கி வந்து தமிழ்நாடு மதுபாட்டில்கள் போல் மாற்றி விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒசூர் அருகே எதிரே பள்ளியில் வீடு வாடகைக்கு எடுத்து 4 பேர் கும்பல் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீஸ் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கைப்பற்றியது. மேலும், ஒருவரை தேடி வருகிறது.

 

 

 

 

 

Continues below advertisement