அனுமனை விரதம் இருந்து வழிபட்டால், நாம் நினைத்தவைகள் நடக்கும்; சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும் என்று நம்பப்படுகிறது.


அனுமன் வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று அழைக்கப்படுகிறார். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கேசரி மைந்தன் ஆஞ்சநேயர் மார்கழி மாதம் அமாவாசை நாளில் மூலம் நட்சத்திர நாளில் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.


 


அனுமனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்:


அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும்; தீரா துன்பங்கள் விலகும்;  இன்பம் பெருகும்; ஆஞ்சநேயரை ராம நாமத்தால் வழிப்படுவதோடு, வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் கொண்டு அலங்காரம் செய்து ஆராதிக்க வேண்டும். அனுமன் ஜெயந்தி நாளன்று கோயிலுக்கு சென்று அனுமனை வழிப்பட்டால் பல நன்மைகள் நடக்கும்.


சனிக்கிழமை அனுமனுக்கு உகந்த நாள். சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் வந்து சேரும். போலவே, அதைவிட பல அற்புதங்களை நிகழ்த்தும் சக்தி கொண்டது, அனுமன் ஜெயந்தி நாளன்று கடைப்பிடிக்கப்படும் விரதம்.  அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை  உணவு மட்டும் சாப்பிட்டால், பல உன்னத பலன்கள் கிடைக்கும் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.


வைணவத்தின் படி, அனுமன் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. எவ்வளவு துன்பங்களையும் சமாளிக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் அருள்பவர் அனுமன். "ராமா" என்று சொல்லும்போது அதில் அனுமனும் இருப்பார் என்பது நம்பிக்கை.


விரதம் கடைப்பிடிப்பது எப்படி?


நினைத்தவைகள் கை கூட, அனுமன் பிறந்தநாளன்று விரதம் இருப்பது பல மகிமையை தரும் வல்லமை படைத்தது. அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, ராம நாமம் சொல்லி அனுமனை வணங்க வேண்டும். அன்றைய தினம் உணவருந்தாமல், விரதம் இருக்க வேண்டும்.  அருகில் இருக்கும் ராமர், அனுமன் கோவிலுக்குச் சென்று அனுமனுக்கு துளசி மாலை மற்றும் வெற்றிலை மாலை கொடுத்து வழிபடலாம்.


வீட்டில் உள்ள அனுமன் படத்தை பொட்டு வைத்து வழிபடலாம். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை படைக்கலாம். முழு நேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள், மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும். மறுநாள் காலையில் துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண