சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது, “தஞ்சாவூர் அருகே பிளஸ் டூ படிக்கும் மாணவி மற்றும் பெற்றோரை பள்ளி ஆசிரியர் ராக்லின் மேரி, விடுதி வார்டன் சகாயமேரி ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தி உள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் பள்ளியில் புல் வெட்டுதல் கழிவறை சுத்தம் செய்யும் பணியை செய்ய மாணவியை வற்புறுத்தியதால் மணமுடைந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை முயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதமாற்றத்திற்கு மறுத்ததாக  மாணவி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியாகி உள்ளது. படிக்கும் மாணவியை மதமாற்றம் செய்ய நிர்ப்பந்தம் செய்வது தவறானது.


தஞ்சை மாவட்ட எஸ்பி ரவிப்பிரியா நேற்றைய பத்திரிகை பேட்டியில் மதமாற்றம் நடந்ததாக தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். விசாரணை முடியாமல் யார்? தூண்டுதலால் உள்நோக்கத்துடன்  எஸ்பி மதமாற்ற முயற்சி நடைபெறவில்லை  என்று உறுதி செய்தார்?” என்று கேள்வி எழுப்பினார்.


மேலும், “ரவளி பிரியா எஸ்.பி இருக்கும் வரை இந்த மாணவி உயிரிழப்பு வழக்கில் நியாயம் கிடைக்காது. திமுக ஆட்சியில்  இந்துக்களுக்கு எதிரான மதவெறி வன்முறை தாக்குதல்களுக்கு நியாயம் கிடைக்காது என்பது மிக தெளிவாக தெரிகிறது.  வழக்கை NIA அல்லது சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும். அல்லது  கர்நாடகா போன்ற வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்து வழக்கை விசாரிக்க  வேண்டும். ராக்லின் மேரி சகாயமேரி கைது செய்யப்பட வேண்டும். 



BSP பள்ளி விவகாரத்தில் எம்பி கனிமொழி ட்விட் போட்டார். இப்போது கனிமொழி அவர்கள் எங்கே போனார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் கிருஸ்தவ வெறியாட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் நீதித்துறை சுயயேட்சையாக செயல்பட முடியாமல் மிரட்ட படுகிறது. நீதிபதி ஒருவர் கிறிஸ்துவ பள்ளியில் பாலியல் அத்துமீறல் போன்ற செயல்கள் நடக்காமல் இருக்கின்றனவா? என்ற கேள்வி கேட்டார். இதற்காக  வழக்கறிஞர்கள் பலர் இந்தக் குறிப்பிட்ட நீதிபதி கிறிஸ்துவ வழக்கு தொடர்பாக ஏதும் விசாரிக்க கூடாது என்று தலைமை நீதிபதியிடம் மனு அளித்திருந்தனர். காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக செயல்படவில்லை. தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளி பிரியாவை உடனே மாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரவேண்டும்


இந்திய ஆட்சிப் பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசின் பணியாளர்கள், மத்திய அரசு என்று சொன்னவர்கள் தற்போது தமிழகத்தில்  ஒன்றிய அரசு என்று கூறுவது தவறு. இது பிரிவினையை தூண்டுவதாக உள்ளது. அரசியல்வாதிகள் கூறுவது போல் ஒரு அரசு அதிகாரி பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் கூற கூடாது. மத்திய அரசு ஆட்சிப் பணியில் உள்ளவர்களை பணி மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.


குடியரசு தின வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் 2017, மற்றும் 2018 வருடங்களில் பிஜேபி ஆளும் உத்தரப் பிரதேசம் உத்தர்காண்ட் போன்ற மாநில ஊர்திகள் கூட குடியரசு தின விழாவில் பங்கேற்க வில்லை. மாநிலங்களை பாரபட்சம் காட்டுவதாக பேசுவது மோசடி பிரிவினைவாதம். இது மாதிரி பேசுவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிராக சிலுவைப் போர் நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” என்று ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார் .