மேலும் அறிய

புதுச்சேரியில் GST வரி குறைப்பு: நுகர்வோருக்கு இனிப்புச் செய்தி! பலன் கிடைக்குமா?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள GST பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும், இன்று 22ம் தேதி முதல் வழங்கும் பில்களில் திருத்தப்பட்ட GST விகிதங்களைக் குறிப்பிட வேண்டும்.

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய ஜி.எஸ்.டி., வரி விகிதம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது, வணிகர்கள் இந்த வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர். 

புதிய ஜி.எஸ்.டி., வரி விகிதம் இன்று முதல் அமல்

புதுச்சேரியில் புதிய ஜி.எஸ்.டி., வரி விகிதம் இன்று முதல் அமலாகிறது. வணிகர்கள் பில்களில் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., விகிதங்களைக் குறிப்பிட்டு நுகர்வோர்களுக்கு அதன் பலன்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி வணிக வரி துறை தணிக்கை புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் ரேவதி செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது 56-வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி விகிதங்களைக் குறைப்பதற்கான பல்வேறு சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

தற்போதுள்ள 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய நான்கு ஜி.எஸ்.டி., வரி விகித அமைப்பு, இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என, எளிமையான இரண்டு விகிதங்களாக மாற்றப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மற்றும் சாமானியர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5 சதவீத சலுகை ஜி.எஸ்.டி., வரி விகிதமும், மற்ற பொருட்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விகிதமும் இருக்கும். உணவு தானியங்கள், விவசாயப் பொருட்கள், கல்வி சேவைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வரி விலக்கின் கீழ் இருக்கும்.

12 சதவீதம் மற்றும் 28 சதவீத ஜி.எஸ்.டி., வரி விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. 12 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் 5 சதவீத சலுகை ஜி.எஸ்.டி., வரி விகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

சில பொருட்கள் மட்டுமே 18 சதவீத ஜி.எஸ்.டி., விகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதேபோல், 28 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரிக்கு மாற்றப்பட்டுள்ளன.

ஆடம்பர பொருட்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத ஜி.எஸ்.டி., வரி விகிதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் சாமானியர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வரிச் சுமையைக் குறைக்கும்.

இது சிறு வணிகர்களுக்கும் வணிகங்களுக்கும் வியாபாரம் செய்வதை எளிதாக்கும். திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை அமல்படுத்துவதற்கான அறிவிக்கைகளை புதுச்சேரி அரசின் வணிக வரித்துறை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வரி விகிதங்கள் இன்று 22ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள GST பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும், இன்று 22ம் தேதி முதல் வழங்கும் பில்களில் திருத்தப்பட்ட GST விகிதங்களைக் குறிப்பிட வேண்டும்.

வணிகர்கள் இந்த வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், வணிக வரித்துறையை அணுகலாம். இல்லையெனில் 73977 17723 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் அனுப்பலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: சீமான் பேச்சு நகைச்சுவை - அமைச்சர் வன்னியரசு !
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: சீமான் பேச்சு நகைச்சுவை - அமைச்சர் வன்னியரசு !
காசு இல்லாமல் TNPSC, IBPS தேர்வுகளுக்கு இனி ஈசியா படிக்கலாம் அரசு தரும் பொன்னான வாய்ப்பு!
காசு இல்லாமல் TNPSC, IBPS தேர்வுகளுக்கு இனி ஈசியா படிக்கலாம் அரசு தரும் பொன்னான வாய்ப்பு!
புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 25,213 பேருக்கு அபராதம்! போக்குவரத்து போலீசார் அதிரடி - முழு விவரம்!
புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 25,213 பேருக்கு அபராதம்! போக்குவரத்து போலீசார் அதிரடி - முழு விவரம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
Embed widget