கல்லறை திருநாள் - கரூரில் கொட்டும் மழையில் மூதாதையர்களுக்கு அஞ்சலி

கல்லறை திருநாளை முன்னிட்டு கரூரில் இறந்தவர்களின் கல்லறையில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு.

Continues below advertisement

இறந்தவர்களின் ஆன்மாக்களை நினைவு கூறும் வகையில், கல்லறை நாள் அனுசரிக்கப்படுகிறது. கல்லறை நாளை முன்னிட்டு, கரூர் லைட்டர்ஸ் கார்னர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ ஆலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம், பாலமபுரத்தில் உள்ள புனித கத்தோலிக்க திருச்சபை காண, கல்லறை தோட்டம் மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு உரிய கல்லறை தோட்டங்களில் அந்தந்த ஆலயங்களின் பங்குத் தந்தை தலைமையில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் இளைப்பாறும் வகையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Continues below advertisement


காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் தங்களின் மூதாதையர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, வெள்ளை அடித்து, கல்லறையின் மேல் உள்ள சிலுவைகளுக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், பல்வேறு நிகழ்வுகள் மாலை நேரத்தில் நடத்தப்பட இருந்த நிலையில் மாலை நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக இந்த நிகழ்வுகள் தடைபட்டது. மழைவிட்ட பிறகு வழிபாடுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


 

கரூரில் கிறிஸ்தவர்கள் தங்களது மூதாதையர்களுக்கு அஞ்சலி.

கல்லறை திருநாளை ஒட்டி, கரூரில் கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினர் உறவினர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். ஆண்டுதோறும் கல்லறை திருநாளாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறைகளில், கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர்களின் கல்லறையில் வெள்ளை அடித்து, சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து பின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கல்லறை திருநாளை ஒட்டி, கரூர் சர்ச் கார்னர் கல்லறை தோட்டம், பாலம்மாபுரம் கல்லறை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் திரளாகச் சென்று, இறந்த தங்களது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.



தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்பு.

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை (டி.என்.பி.எல்) வளாகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு காகித ஆலையில் தேசிய ஒற்றுமையினால் உறுதிமொழி இயற்பெயர் கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு கூறும் விதமாக தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த இந்திய நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை வளாகத்தில் நடைபெற்றது உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் செயல் இயக்குனர் (இயக்கம்) கிருஷ்ணன் தலைமை வகித்தார். இங்குள்ள ஆலை அலுவலர்கள், பணியாளர்கள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர் (பாதுகாப்பு) ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர் (மனித வளம்) சிவகுமார், விழிப்புணர்வு அலுவலர் வைத்தியநாதன் உட்பட பல பங்கேற்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola